இலங்கை பணக்காரர்களுக்காக வாகன இறக்குமதி! டொலர்களை சேமிக்க வேண்டிய இக்கட்டில் இலங்கை
எமது நாடு அந்நியச் செலாவணியையும், நாட்டுக்கு கிடைக்கும் ஒவ்வொரு அமெரிக்க டொலர்களையும் சேமித்தே ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்கின்றது என பொருளாதார நிபுணர் அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் தவறான முடிவு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
என்னைப் பொறுத்தமட்டில், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான இந்த அரசாங்கத்தின் நடவடிக்கையானது ஒரு தவறான முடிவாகும்.
நாங்கள் அதிகமாக அந்நிய செலாவணி மற்றும் எமது நாட்டுக்கு கிடைக்கும் டொலர்களை சேமித்து வைக்க வேண்டிய தேவை உள்ளது.

ஏனெனில் பல அதிர்ச்சிகரமான விளைவுகள் ஏற்படும் என்பதை நாங்கள் அறிந்திருக்கின்றோம். நாங்கள் அதிகமான உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. அதற்குரிய இயந்திரகள் தேவையாகவிருக்கின்றது.
அதேசமயம், பொது போக்குவரத்திற்கான அதிக தேவைகள் இருந்தால், பொது போக்குவரத்திற்கான வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டும்.
ஆனால், நாட்டின் பணக்காரர்களுக்கு என ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்யக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan