உலக நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சி : உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிரடியாக ட்ரம்ப் விதித்த கூடுதல் வரி
அமெரிக்க உச்ச நீதிமன்றம், தான் முன்னர் விதித்திருந்த வரிகளை இரத்துச் செய்து தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்போது புதிதாக 10 சதவீத உலகளாவிய வரியை விதிப்பதாக அறிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் புதிய வரி
மேலும், பிரவு 122 இன் கீழ் இந்த 10 சதவீத கூடுதல் வரியை விதிக்கும் கட்டணத்தில் தான் இன்று கையெழுத்திடுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இது ஏற்கனவே வசூலிக்கப்படும் எங்கள் வழக்கமான கட்டணங்களுக்கு கூடுதலாக விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மற்ற நாடுகள் மற்றும் நிறுவனங்களின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளிலிருந்து தமது நாட்டைப் பாதுகாக்க பிரிவு 301 உள்ளிட்ட பல பிரிவுகள் குறித்தும் தாங்கள் ஆய்வுகளை நடத்தவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு விதித்த பெரும்பாலான அதிக சுங்க வரிகள் சட்டவிரோதமானவை என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
ட்ரம்ப் தனது நிர்வாக அதிகார வரம்பை மீறி செயற்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது.
8 ஆண்டுகளுக்கு பிறகு பேட்டி கொடுக்கப்போகும் நடிகர் ரஜினிகாந்த்... எப்போது, எந்த டிவி, முழு விவரம் Cineulagam
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri