உலக நாடுகள் மீது ட்ரம்பின் வரி விதிப்பு குறித்து அமெரிக்க உச்ச நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு விதித்த பெரும்பாலான அதிக சுங்க வரிகள் சட்டவிரோதமானவை என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ட்ரம்ப் தனது நிர்வாக அதிகார வரம்பை மீறி செயற்பட்டுள்ளதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
6–3 என்ற பெரும்பான்மை தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
விதிக்கப்பட்ட வரிகள்
1977ஆம் ஆண்டு தேசிய அவசரநிலைகளை சமாளிக்க இயற்றப்பட்ட சர்வதேச அவசர பொருளாதாரச் சட்டத்தின் கீழ் ட்ரம்ப் நிர்வாகத்தினால் இந்த வரிகள் விதிக்கப்பட்டன.
எனினும், ட்ரம்ப் நிர்வாகத்தினால் உலக நாடுகளுக்கு விதித்த பெரும்பாலான சுங்க வரிகள் இந்த சட்டத்தின் பிரகாரம் அல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு, ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பிய பின்னர் முன்வைத்த மிகத் துணிச்சலான நிர்வாக அதிகாரக் கோரிக்கைகளில் ஒன்றிற்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.
ட்ரம்ப், இந்த சுங்க வரிகள் அமெரிக்க மத்திய அரசுக்கான வருமானத்தை பெருக்கி, தொழிற்துறையை உயிர்ப்பித்து, உலக பொருளாதாரத்தை அமெரிக்காவுக்கு “நியாயமானதாக” மாற்றும் என வாதிட்டிருந்தார்.
ஆனால் பொருளாதார நிபுணர்கள், இவ்வரிகள் ஏற்கனவே அதிகரித்த பணவீக்கத்துக்குப் பின்னர் அமெரிக்கர்களுக்கு கூடுதல் விலைச் சுமையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக எச்சரித்திருந்தனர்.
அமெரிக்க அரசியலமைப்பின் படி, வரிகளை விதிக்கும் பிரதான அதிகாரம் காங்கிரஸுக்கே உண்டு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் ட்ரம்ப், சர்வதேச அவசர பொருளாதரச் சட்டத்தின் கீழ் தேசிய அவசரநிலையை காரணமாக காட்டி, சர்வதேச வர்த்தகப் பரிவர்த்தனைகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தமக்குள்ளது என சட்டத்தரணிகள் ஊடாக வாதிட்டார்.
ஜனாதிபதி எல்லையற்ற அளவு, காலவரம்பு, மற்றும் பரப்பளவில் வரிகளை விதிக்கும் அதிகாரம் உள்ளதாகக் கூறுகிறார் எனவும் ஆனால் அதற்கு தெளிவான காங்கிரஸ் அனுமதி தேவை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் இந்த சட்டத்தைப் பயன்படுத்தி சுமார் 301,000 இறக்குமதியாளர்களிடமிருந்து 134 பில்லியன் டொலர் வருமானத்தை வசூலித்துள்ளதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட பணத்தை எவ்வாறு மீள வழங்குவது என்பது குறித்து உச்சநீதிமன்றம் தெளிவான விளக்கங்களை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam