ஐரோப்பிய நாடுகளில் வேலை வாய்ப்பு - பெருந்தொகை மோசடியில் சிக்கிய நபர்
நீர்கொழும்பு பகுதியில் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஐரோப்பிய நாடுகளில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பணமோசடி செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 55 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு, வாக்குறுதி அளித்தபடி வேலையை வழங்கவில்லை என பணியகத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
நிறுவனத்தின் உரிமையாளர் கைது
அதன்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அங்கிருந்த வேலை ஒப்பந்தங்கள் மற்றும் கடவுச்சீட்டு ஒன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, விசா ஆலோசனை வழங்குவதாகக் கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தி வந்த மூவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பல பகுதிகளில் வைத்து கைது செய்துள்ளது.
பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri