முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (08) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக லண்டன் பயணம் மேற்கொண்ட போது அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
நாட்டை உலுக்கிய சிறை மோதல்! பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட சிறை அதிகாரிகளின் சடலங்கள்
மீண்டும் வழக்கு விசாரணை
இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, கடந்த மாதம் 29 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திக்குமார, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (08) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.