வரி வருவாயில் பிரித்தானிய அரசு அதிரடி உயர்வு!
உயர்த்தப்பட்ட மூலதன ஆதாய வரி, முதலாளிகளுக்கான தேசிய காப்பீட்டு பங்களிப்பு மற்றும் வருமான வரி வரவுகள் ஆகியவற்றின் அதிகரிப்பால் பிரித்தானிய அரசாங்கத்தின் நிதி நிலை வலுவடைந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில், அரசாங்கத்தின் செலவினங்களை விட வரி வருவாய் அதிகரித்ததன் காரணமாக £30.4 பில்லியன் உபரி பதிவாகியுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது.
இது 1993ஆம் ஆண்டு பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு மாதத்தில் ஈட்டப்பட்ட மிக உயர்ந்த உபரித் தொகையாகும்.
வருமான வரி
கடந்த 2025 ஜனவரி மாதத்தின் £15.4 பில்லியன் உபரியுடன் ஒப்பிடுகையில், இது கிட்டத்தட்ட இருமடங்கு வளர்ச்சியாகும்.
அத்துடன், வருமான வரி வரம்புகள் மாற்றப்படாமல் முடக்கப்பட்டிருப்பதால், ஊதிய உயர்வு பெறும் மக்கள் அதிக வரி செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இது அரசாங்கத்திற்கு கூடுதல் வருமானத்தைத் தந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனவரி வரையிலான 10 மாதங்களில் அரசாங்கத்தின் கடன் வாங்கும் அளவு கடந்த ஆண்டை விட 11.5% குறைந்துள்ள போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த கடன் சுமை பொருளாதார வளர்ச்சியை விட (GDP) 92.9% என்ற உயர்ந்த மட்டத்தில் தொடர்வது கவலைக்குரியதாக உள்ளது.
நிதி நிலைமை
அதேவேளை, சில்லறை விற்பனை ஜனவரி மாதத்தில் 1.8% ஆக உயர்ந்து எதிர்பார்த்ததை விட சிறந்த வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.
விளையாட்டு ஊட்டச்சத்துப் பொருட்கள் மற்றும் நகைகளுக்கான தேவை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இருப்பினும், வேலையின்மை விகிதம் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாலும், ஊதிய வளர்ச்சி மந்தமாக இருப்பதாலும் இந்த பொருளாதார முன்னேற்றம் நிலையானது தானா என்ற கேள்வியை நிபுணர்கள் எழுப்புகின்றனர்.
இந்தச் சாதகமான நிதி நிலைமை, இன்னும் இரண்டு வாரங்களில் வரவுள்ள வசந்தகால நிதி அறிக்கையின் போது நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸிற்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri