நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் ஜனாதிபதியின் முயற்சி:பிரித்தானிய பிரதமர் பாராட்டு

London Boris Johnson Ranil Wickremesinghe United Kingdom President of Sri lanka
By Steephen Sep 02, 2022 11:43 AM GMT
Report

இலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு முன்னுரிமையளிக்கும், அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ள முயற்சிகளுக்கு பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் பதவியேற்றமைக்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பியுள்ள செய்தியில் பிரித்தானியப் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் வெற்றிக்கு வழிவகுக்கும் செயற்பாடுகள்

ரணில் விக்ரமசிங்க மற்றும் போரிஸ் ஜோன்சன்-Ranil wickremesinghe and Boris Johnson

ஜனநாயக கொள்கைகளை பின்பற்றுவது, ஜனநாயக இணக்கப்பாட்டை எட்டுவது என்பன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் கரிசனையை மீளவலியுறுத்தியுள்ள பிரதமர் போரிஸ் ஜோன்சன், 'நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார, சமூக சவால்களுக்கு மத்தியில், பிரித்தானியா, இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் மிக விரைவில் உங்களால் முன்னேற்றத்தைக் காண முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. இவ்விடயத்தில் இலங்கைக்கு உதவ, எமது சர்வதேச பங்குதாரர்களுடன் பிரித்தானியா இணைந்து செயற்பட காத்திருக்கின்றது." எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் நிலையான மற்றும் கணிசமான முன்னேற்றத்தை அடைவதற்கு, இரண்டு அரசாங்கங்களும் இணைந்து செயற்பட முடியும் எனவும் பிரித்தானிய பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மனித உரிமைச் சான்றுகளை நிரூபிக்க இலங்கைக்கு கிடைத்துள்ள தருணம்

போரிஸ் ஜோன்சன்-Boris Johnson

'செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு, , அணுகுமுறை மாற்றத்துடனான இலங்கையின் மனித உரிமைச் சான்றுகளை நிரூபிக்க இலங்கை அரசாங்கத்துக்கு சிறந்த தருணமாக இருக்கும்.

இவ்விடயங்களில் அனைவரும் உணரக்கூடிய உண்மையான முன்னேற்றத்தை உருவாக்க, பிரித்தானியாவும், சர்வதேச சமூகமும், இலங்கையுடன் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது.

அண்மையில் அறிவிக்கப்பட்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டம் தொடர்பில் சுட்டிக்காட்டிய பிரித்தானிய பிரதமர், இத்திட்டத்தின் மூலம் இலங்கை ஏற்றுமதி செய்யும் மொத்த பொருட்களின் பெரும்பகுதிக்கு, வரிச் சலுகை அணுகுமுறை மூலம் பயனடைவதற்கான வாய்ப்பு கிட்டும். 

'எமது இருதரப்பு உறவை பலப்படுத்துவதன் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றை மேலும் மேம்படுத்துவதற்கான பல வாய்ப்புக்களை நாம் கண்டறிய முடியும்.

பசுமை பொருளாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க வலு மூலம், இலங்கைக்கு ஆதரவு வழங்குவதற்கான உறுதியான சந்தர்ப்பங்கள் பிரித்தானியாவிடம் உள்ளதென நான் நம்புகிறேன்." எனவும் பிரித்தானிய பிரதமர் கூறியுள்ளார்.

அத்துடன் கடந்த மே மாதம் காலநிலை மாற்றம் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் தாம் அடைய எதிர்பார்த்திருக்கும் இலக்குகளை பரிமாறிக் கொண்டமை தொடர்பிலும் பிரித்தானிய பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள நிலையில், பிரித்தானியா - இலங்கை இடையிலான உறவு மென்மேலும் பலமடையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுக்கு இலங்கை வழங்கியுள்ள முன்னுரிமைக்கு பாராட்டுத் தெரிவித்துள்ள பிரித்தானிய பிரதமர், இலங்கையில் ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தியை மீளக்கட்டியெழுப்ப ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சிகள் வெற்றியளிக்க தான் உளமார வாழ்த்துவதாகவும் பிரித்தானிய பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US