இந்திய கடற்படையின் புதிய வியூகம்!! களத்தில் இறக்கப்படும் விமானம் தாங்கிய பிரம்மாண்ட போர்க்கப்பல்

Narendra Modi India
By Benat Sep 02, 2022 07:33 AM GMT
Report

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டான ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற கப்பல் இன்று அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியினால் நாட்டுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வைத்து பிரதமர் மோடியால் இந்த கப்பல் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி கப்பலாக இது காணப்படுகின்றது.

இந்திய கடற்படையின் புதிய வியூகம்!! களத்தில் இறக்கப்படும் விமானம் தாங்கிய பிரம்மாண்ட போர்க்கப்பல் | Features Of Ins Vikrant India Narendra Modi

இந்திய வரலாற்றில் இதுவரை 20,000 கோடி ரூபாய் செலவில், அதி நவீன தானியங்கி அம்சங்களைக் கொண்டு கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகும். விக்ராந்த் என்றால் வெற்றி மற்றும் வீரம். அவ்வாறான ஒரு நிலையைக் கொண்டு இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு, இந்தக் கப்பலை கட்டுவதற்காக ஸ்டீல் கட் செய்யப்பட்டு, பணிகள் துவக்கி வைக்கப்பட்டது.

இந்திய பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியப் பாதுகாப்பு துறையை தன்னிறைவு கொண்டாதாக மாற்ற அரசாங்கத்துக்கு உந்து சக்தியா விளங்குவது, எடுத்துக்காட்டாக இருப்பது ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு இதன்போது தெரிவித்துள்ளார்.

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் அல்ல, மிகப்பெரிய ராட்சத உருவம் கொண்டது. தனித்துவமானது, சிறப்பானது. 21ம் நூற்றாண்டுக்கு இந்தியாவுக்கான கடமை ஆகியவற்றை இந்த கப்பல் வலியுறுத்துகிறது.

உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்தி மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பல்களை வடிவமைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இன்று சேர்ந்துள்ளது.

இந்திய கடற்படையின் புதிய வியூகம்!! களத்தில் இறக்கப்படும் விமானம் தாங்கிய பிரம்மாண்ட போர்க்கப்பல் | Features Of Ins Vikrant India Narendra Modi

இந்தியாவின் புதிய நம்பிக்கையை நிரப்பியுள்ளது, நாட்டுக்கு புதிய நம்பிக்கை ஒளியை அளித்துள்ளது. விகாராந்த் கப்பலின் ஒவ்வொரு பாகமும் சிறப்பானது, வலிமையானது, உள்நாட்டு தயாரிப்பில் உருவானது. உள்நாட்டு படைப்பின் அடையாளம், உள்நாட்டு வளங்கள், திறமைகள், திறன்களின் கூட்டு.

கப்பலில் பயன்படுத்தப்பட்ட உருக்குப் பொருட்கள் உள்நாட்டைச் சேர்ந்தவை என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஐஎன்எஸ் விக்ராந்த்

’ஐஎன்எஸ் விக்ராந்த் ‘ என்பது 1961ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கடற்படையிடம் இருந்து வாங்கப்பட்ட கப்பலுக்கு வைக்கப்பட்ட பெயர் ஆகும்.

1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரில் இந்தப் போர்க்கப்பல் பெரும் பங்கு வகித்தது. 1997ஆம் ஆண்டு இந்தக் கப்பலின் சேவை நிறைவு பெற்ற நிலையில், அக்கப்பலின் நினைவாக முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலுக்கு ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் 2-வது விமானந்தாங்கி போர்க்கப்பல் ஆகும். ஏற்கனவே இந்தியாவிடம் உள்ள விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்டதாகும்.

இந்திய கடற்படையின் புதிய வியூகம்!! களத்தில் இறக்கப்படும் விமானம் தாங்கிய பிரம்மாண்ட போர்க்கப்பல் | Features Of Ins Vikrant India Narendra Modi

தற்போது உலகில் ஐந்து அல்லது ஆறு நாடுகள் மட்டுமே விமானம் தாங்கி கப்பலைத் தயாரிக்கும் திறனைக் கொண்டுள்ளன. தற்போது இந்தியாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் சிறப்பம்சங்கள்

'விக்ராந்த்' கட்டுமானத்திற்காக, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் இந்தியா இணைந்தது.

உள்நாட்டில் விமானம் தாங்கி கப்பலை வடிவமைத்து உருவாக்குவதற்கான முக்கிய திறனை இந்தியா கொண்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்தியாவின் முக்கிய தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட சிறுகுறு நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த போர்க்கப்பல் கட்டப்பட்டுள்ளது.

போர்க் கப்பல் வடிவமைப்பு அமைப்பு, இந்திய கடற்படையின் உள் நிறுவனம் மற்றும் கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது.

262 மீட்டர் நீளம் மற்றும் 62 மீட்டர் அகலம் கொண்ட விக்ராந்த் முழுமையாக கட்டமைக்கப்பட்ட பின்னர் 43000 டன் எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.

இந்திய கடற்படையின் புதிய வியூகம்!! களத்தில் இறக்கப்படும் விமானம் தாங்கிய பிரம்மாண்ட போர்க்கப்பல் | Features Of Ins Vikrant India Narendra Modi

28 நாட்கள் வேகத்தில், 7500 கடல் மைல்கள் தூரம் செல்லக் கூடியது. இது சுமார் 2,200 பெட்டிகளைக் கொண்டுள்ளது, சுமார் 1,600 பணியாளர்கள் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் பெண்கள் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் தங்குவதற்கு சிறப்பு அறைகள் உள்ளன. பிசியோதெரபி கிளினிக், ஐசியூ, ஆய்வகங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டு உள்ளிட்ட சமீபத்திய உபகரணங்களுடன் கூடிய முழு அளவிலான மருத்துவ வளாகத்தையும் கப்பல் கொண்டுள்ளது.

இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள், இலகுரக போர் விமானங்கள், தவிர MiG-29K போர் விமானங்கள், Kamov-31 மற்றும் MH-60R மல்டி-ரோல் ஹெலிகாப்டர்களை உள்ளடக்கிய 30 விமானங்களைக் கொண்ட விமானப் பிரிவை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.     

இந்திய கடற்படையின் புதிய வியூகம்!! களத்தில் இறக்கப்படும் விமானம் தாங்கிய பிரம்மாண்ட போர்க்கப்பல் | Features Of Ins Vikrant India Narendra Modi

இந்திய கடற்படையால் வடிவமைக்கப்பட்டு கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட இந்தக் கப்பல், இந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட கப்பல்களை விட சுமார் 7 மடங்கு பெரியதாகும்.

இக்கப்பலைத் தயாரிக்க 23,000 டன் எஃகு, 2,500 கிலோ மீட்டர் மின்சார கேபிள்கள், 150 கிலோ மீட்டர் குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கப்பலில் உள்ள நான்கு என்ஜின்களும் சேர்ந்து 88 மெகாவாட் சக்தியை உருவாக்குகின்றன. அது ஒரு நகரத்திற்கே மின்சாரம் வழங்க போதுமானதாகும்.  

இந்திய கடற்படையில் எழுச்சி

இந்திய கடற்படையின் புதிய வியூகம்!! களத்தில் இறக்கப்படும் விமானம் தாங்கிய பிரம்மாண்ட போர்க்கப்பல் | Features Of Ins Vikrant India Narendra Modi

சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்த போர்க்கப்பல் உருவாகி உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் முதலாவது சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 நாட்களுக்கு நடைபெற்றது.

பின்னா் கடந்த அக்டோபர், ஜனவரி, ஜூலை மாதம் என மொத்தம் 4 சோதனை ஓட்டங்கள் நடைபெற்றுள்ளன. பிரதமர் மோடி ஐஎன்எஸ் விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணித்து விட்டாலும், அடுத்த ஆண்டு இறுதியில் தான் இது முழுமையாக இயக்கத்திற்கு வரும். 

உள்நாட்டிலேயே போர்க்கப்பல் தயாரிப்பதற்கான சாத்தியத்தை நிஜமாக்கியதன் மூலம் ’ஐஎன்எஸ் விக்கிராந்த்’ இந்திய கடற்படையில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று  கூறப்படுகின்றது. 

மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US