Facebook சேவை திடீர் முடக்கம் - உலகளவில் பயனர்கள் அவதி!
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களின் சேவைகள் இன்று(19.07.2026) திடீரென முடங்கியதால், உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்கள் செயலிகளையும் இணையதளத்தையும் அணுக முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இணையதளங்களின் முடக்கத்தைக் கண்காணிக்கும் “டவுன்டெக்டர்” வலைத்தளத்தின் தரவுகளின்படி, அமெரிக்காவில் மட்டும் ஆயிரக்கணக்கான பயனர்கள் இந்த முடக்கம் தொடர்பில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
பிலியந்தல துப்பாக்கிச்சூடு! பொலிஸார் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் - விசாரணையில் வெளியான தகவல்
சமூக வலைத்தளங்கள் முடக்கம்
ஃபேஸ்புக் தளத்தைப் பயன்படுத்துவதில் சுமார் 4,800க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளும், இன்ஸ்டாகிராம் செயலியைப் பயன்படுத்துவதில் 2,800க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

இதில் ஃபேஸ்புக் பயனர்களில் 63 சதவீதம் பேர் அதன் இணையதளப் பக்கத்தை அணுகுவதில் தான் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
அமெரிக்கா மட்டுமன்றி, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் விட்டு விட்டு இயங்குவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
இந்த திடீர் சேவை முடக்கம் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து மெட்டா நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - அமல்
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam