இலங்கை புலனாய்வாளர்களுக்கு முதன் முறையாக கிடைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படம்

Sri Lankan Tamils Sarath Fonseka Sri Lanka Sri Lanka Final War
By Benat Jul 19, 2026 09:54 AM GMT
Report

1994ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தையின் போதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது சரியான தோற்றத்துடனான புகைப்படத்தை முதன் முதலில் நாங்கள் பார்த்தோம் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம்..! இறுதி முடிவு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம்..! இறுதி முடிவு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

முதல் புகைப்படம்

ஒரு இராணுவத் தளபதியாக பிரபாகரனை முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், எனது கையால் அதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்ததில்லை. எனது பணி அதுவல்ல.  இராணுவத் தளபதியின் பணி ஒருவரது தலையில் துப்பாக்கியால் சுடுவது அல்ல.

எனினும், எமது இளவயதில் இப்படியொரு நிலை இருந்திருந்தால் ஒருவேளை அந்த எண்ணம் எனக்குத் தோன்றியிருக்கலாம்.

இலங்கை புலனாய்வாளர்களுக்கு முதன் முறையாக கிடைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படம் | First Photo Of The Leader Of The Ltte

அத்துடன், ஆரம்பக் காலத்தில் பிரபாகரன் உள்ளிட்டவர்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகத் தான் வாழ்ந்தார்கள். எனவே அவர்களை நேருக்கு நேர் சந்திக்கும், மோதும் சந்தர்ப்பங்கள் இருந்ததில்லை.

1994ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தையின் போதுதான், பிரபாகரனின் உண்மையான புகைப்படம் கூட புலனாய்வாளர்களுக்கு கிடைத்தது.

இலங்கை புலனாய்வாளர்களுக்கு முதன் முறையாக கிடைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படம் | First Photo Of The Leader Of The Ltte

அதுவரை பிரபாகரனின் தோற்றம் தொடர்பான தெளிவான ஒரு புகைப்படமும் எங்களிடம் இருந்ததில்லை.

1994ஆம் கிடைத்த புகைப்படத்திற்கு முதல், பிரபாகரனின் சாதாரண தரப் பரீட்சைக்கான அடையாள அட்டையில் இருந்த ஒரு புகைப்படம் தான் புலனாய்வாளர்களிடம் இருந்தது.

அதன்பிறகு, பிரபாகரன் இந்தியாவில் இருந்தபோது எடுக்கப்பட்ட ஒரு தெளிவான புகைப்படத்தைத் தான் நாங்கள் முதன் முதலில் பார்த்தோம் என குறிப்பிட்டுள்ளார்.   

பிலியந்தல துப்பாக்கிச்சூடு! பொலிஸார் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் - விசாரணையில் வெளியான தகவல்

பிலியந்தல துப்பாக்கிச்சூடு! பொலிஸார் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் - விசாரணையில் வெளியான தகவல்

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - இளைஞர்கள் இருவர் பரிதாபமாக பலி

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - இளைஞர்கள் இருவர் பரிதாபமாக பலி

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US