பிலியந்தல துப்பாக்கிச்சூடு! பொலிஸார் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் - விசாரணையில் வெளியான தகவல்

Sri Lanka Police Colombo
By Dhayani Jul 19, 2026 07:36 AM GMT
Report

புதிய இணைப்பு

பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் இன்று காலை (19) கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரை தாக்கிய நபர் மீதே துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கூர்மையான ஆயுத தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரியும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபரும் தற்போது கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - இளைஞர்கள் இருவர் பரிதாபமாக பலி

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - இளைஞர்கள் இருவர் பரிதாபமாக பலி

கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் 

கூர்மையான ஆயுதங்களை ஏந்தியபடி இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு சந்தேகநபர்கள், பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டை தாக்கி அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

பிலியந்தல துப்பாக்கிச்சூடு! பொலிஸார் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் - விசாரணையில் வெளியான தகவல் | Police Shooting In Kalubowila 

இதன்பின்னர், சந்தேகநபர்கள் பிலியந்தலாவை நோக்கி தப்பிச்செல்வதாக பொரலஸ்கமுவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.


அதன்படி, பிலியந்தலாவ பொக்குந்தர வீரசிங்க மாவத்தை பகுதியில் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ​​தப்பிச்சென்ற இரண்டு சந்தேகநபர்களின் மோட்டார் சைக்கிளை நிறுத்த பொலிஸ் அதிகாரிகள் பெரும் முயற்சி மேற்கொண்டிருந்தபோது, ​​மோட்டார் சைக்கிள் சாரதி தனது கையில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளார்.

இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக பொலிஸ் அதிகாரியை மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில், சந்தேகநபரின் இடுப்புப் பகுதியில் குண்டு பாய்ந்ததில் அவர் கீழே விழுந்துள்ளார்.  

இதனையடுத்து காயமடைந்த 24 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்திய மற்றைய நபர் தப்பிச்சென்றுள்ளார்.

போதைப்பொருள் தகராறு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கொஸ் மல்லி என்றழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரின் உத்வியாளரே காயமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், தாக்குதலுக்குள்ளான வீட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

போதைப்பொருள் தகராறு காரணமாக வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.  

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை மற்றும் பொரலெஸ்கமுவ பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டாம் இணைப்பு

பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இன்று காலை (19) நடத்தப்பட்ட சோதனையின் போது துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் வாகனத்தில் வந்த இரண்டு நபர்களிடம் விசாரணை நடத்த முயன்றபோது, ​​சந்தேகநபர்களில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸாரரை தாக்க முயன்றுள்ளார்.

இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், சந்தேகநபர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இவ்வாறு காயமடைந்த சந்தேக நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் வாகனத்தில் வந்த மற்றொரு நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச்சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

முதலாம் இணைப்பு

பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட முற்பட்ட போது பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இன்று (19) காலை இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீவிர எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை..! அவதானமாக இருக்குமாறு பல மாவட்ட மக்களுக்கு அறிவுறுத்தல்

தீவிர எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை..! அவதானமாக இருக்குமாறு பல மாவட்ட மக்களுக்கு அறிவுறுத்தல்

பொலிஸார்  விசாரணை

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிலியந்தல துப்பாக்கிச்சூடு! பொலிஸார் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் - விசாரணையில் வெளியான தகவல் | Police Shooting In Kalubowila

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

யாழில் பூட்டிய வீடொன்றிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்.. அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழில் பூட்டிய வீடொன்றிற்குள் இருந்து வந்த துர்நாற்றம்.. அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US