கொழும்பில் அதிகாலையில் பரபரப்பு - பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு
கொழும்பு - கொள்ளுப்பிட்டியின் 6 வது ஒழுங்கை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் அந்த பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், வெளியே இருந்த இரண்டு பெண்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு
துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு தனிப்பட்ட காரணத்திற்காக நடத்தப்பட்டதாகவும், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கொழும்புப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.