அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகள்: கடும் நெருக்கடியில் ஈரான் பொருளாதாரம்
அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் எண்ணெய் ஏற்றுமதி முடக்கம் காரணமாக ஈரானின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகளால் ஈரானின் மசகு எண்ணெய் ஏற்றுமதி நாளொன்றுக்கு 1.7 மில்லியன் பீப்பாய்கள் இருந்து வெறும் 2.6 லட்சம் பீப்பாய்கள் குறைந்துள்ளது.
கடும் நெருக்கடி
மேலும், ஈரானுக்கு முக்கிய வர்த்தக மற்றும் நிதி மையமாக இருந்த ஐக்கிய அரபு இராச்சியம் அனைத்து வணிகத் தொடர்புகளையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது அந்த நாட்டிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான ஈரானிய ரியால் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிந்துள்ள நிலையில், உணவுப் பொருட்களின் விலை இருமடங்காக உயர்ந்து பணவீக்கம் 69.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஒரு குடும்பத்தின் குறைந்தபட்ச மாதச் செலவு 450 டொலராக இருக்கும் நிலையில், சராசரி மாதச் சம்பளம் 125 டொலராக மட்டுமே உள்ளதால் மக்கள் அன்றாடத் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
சொந்தமாகச் சுத்திகரிப்புத் திறன் குறைவாக இருப்பதால், பெட்ரோலை இறக்குமதி செய்யும் ஈரானிடம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே பெட்ரோல் கையிருப்பு உள்ளது.
இந்தத் தீவிரப் பொருளாதார நெருக்கடி ஈரானில் மீண்டும் பெரிய அளவிலான மக்கள் போராட்டத்தை உருவாக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.