தனியார் பேருந்து ஒன்றின் மீது காட்டு யானை தாக்குதல்: 10 பேர் காயம்
கதிர்காமம் - புத்தல வீதியில் தனியார் பேருந்து ஒன்றின் மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று(3.9.2026) காலை கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிர்காமம் - புத்தல வீதியின் மின்சார வேலி காவல் அரணுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
10 பேர் காயம்
சிலாபத்திலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, புத்தல - கதிர்காமம் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த போதே வீதியிலிருந்த காட்டு யானை அதனை தாக்கியுள்ளது.
யானையின் தாக்குதலால் பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளதுடன், விபத்து இடம்பெற்ற போது அதில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த சுமார் 10 பேர் சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.



19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam
குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan