தமிழர்களின் எதிர்காலம் என்ன..! அரசியல்வாதிகளே - அறிஞர்களே உங்கள் தீர்வை முன்வையுங்கள்

Sri Lankan Tamils Tamils Eastern Province Northern Province of Sri Lanka
By T.thibaharan Oct 12, 2026 10:49 AM GMT
Report

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக ஈழத் தமிழர்களின் அரசியல் தோல்விகளுக்கு மேல் தோல்விகளைக் கண்ட அரசியல் பாதையையே கொண்டுள்ளது. இலங்கையின் வரலாற்றுக் காலம் முழுவதிலும் இரண்டு, மூன்று என பல்வேறு நிர்வாக பிரிவுகளாக இருந்த இலங்கை தீவை பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கோல்புருக்–கமரன் அரசியல் சீர்திருத்தத்தின்கீழ் 1833ம் ஆண்டு ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அன்று உருவாக்கப்பட்ட இலங்கை சட்ட நிரூபண சபையில் (Legislative Council) முதலாவது தமிழ் பிரதிநிதியாக தென்னிந்தியாவிலிருந்து உத்தியோக நிமித்தம் இலங்கை தீவில் வந்து குடியேறிய அருமுகம்பிள்ளை குமாரசுவாமி (Arumugampillai Coomaraswamy) நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை இலங்கை அரசியலில் எந்தத் தலைவர்களும் தமிழ் மக்களுக்கு ஒரு உப்புக்களை தானம் பெற்றுக் கொடுக்கவில்லை மாறாக நாம் இழந்ததோ மலை அளவு.

இந்த உண்மையை புரிந்து கொண்டால் மாத்திரமே தமிழர்களுடைய எதிர்கால அரசியலில் தீர்க்கமான முடிவை இன்றைய தமிழ் தலைவர்களால் எடுக்க முடியும். காலணித்துவகால இலங்கையின் ஜனநாயக அரசியலில் முதலாவது தமிழ் பிரதிநிதியான ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி (A. Coomaraswamy) அவர்களின் பரம்பரையில் 5 பேர் முதல் ஒரு நூற்றாண்டின் பெரும் பகுதியை இலங்கை சட்டநிரூபண சபையில் தமிழர்களுக்கான பிரதிநிதிகளாக இருந்துள்ளனர்.

தமிழ் மக்களை ஆட்சி புரிந்துள்ளனர்

அவர்கள் வெள்ளை எஜமான்களின் நல்ல சேவகர்களாக பணிபுரிந்து சிறந்த அடிமைகளுக்கு வழங்கப்படும் சேர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களை ஆட்சி புரிந்துள்ளனர் என்ற கொடூர உண்மையை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் பரம்பரையினரின் அரச பதவியிலான தமிழ்த் தலைத்துவ ஒழுங்கு

1. ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி — 1833–1836

2. முத்து குமாரசுவாமி — 1862–1879

3. பொன்னம்பலம் இராமநாதன் — 1879–1892

4. பொன்னம்பலம் குமாரசுவாமி — 1892–1898

5. பொன்னம்பலம் அருணாசலம் — 1912–1913 இவ்வாறு அமைகிறது.

தமிழர்களின் பிரதிநிதியாக இருந்து தலைமை தாங்கிய பரம்பரையினரின் இறுதி வாரீசான சேர் பொன் இராமநாதன் ஒரு நூற்றாண்டு ஆட்சிமுடிகிறபோது உருவாக்கப்பட்ட டொனமூர் யாப்பு தமிழர்களுக்கு தீங்கானது ஆனால் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்பதனை "டொனமூர் என்பது இனித் தமிழர்கள் இல்லை" என்று தமது தோல்வியின் ஒப்பு ஒப்புதல் வாக்குமூலத்தை வார்த்தைகளால் மட்டுமே சொல்ல முடிந்தது.

தமிழர்களின் எதிர்காலம் என்ன..! அரசியல்வாதிகளே - அறிஞர்களே உங்கள் தீர்வை முன்வையுங்கள் | Article About Tamil People Future

இராமநாதன் பரம்பரையினரைக்கு அடுத்ததாக தல 20 வருடங்கள் தமிழர்களுக்கு தலைமை தாங்கிய ஜி ஜி பொன்னம்பலம், எஸ் கே வி செல்வநாயகம், அமிர்தலிங்கமும், அதனையடுத்த 30 ஆண்டு ஆயுதப்போராட்டத்தின் முள்ளிவாய்க்கால் முடிவிலிருந்து சம்மந்தன் வரையான யாரும் தமிழர்களுக்கு எந்த அரசியல் உரிமைகளையோ, தீர்வையோ, நலன்களையோ பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

அனைவரும் சிங்கள தலைவர்களால் தோற்கடிக்கப்பட்டார்கள், ஏமாற்றப்பட்டார்கள். அதேபோலவே தமிழ் மக்களின் விடுதலைக்கு ஆயுதப் போராட்டமே ஒரே வழி என புறப்பட்ட ஆயுத விடுதலைப் போராட்டத் தலைவர்கள் எவரும் தமிழ் மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்க முடியாமல் எதிரிகளினால் தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதை கவனத்தில்க் கொள்ளவேண்டும். இராமநாதனைத் தொடர்ந்து எஸ்,ஜே வி செல்வநாயகம் சிங்கள தலையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் தான் தோற்கடிக்கப்பட்டதையும் ஏமாற்றப்பட்டதையும் ஏற்றுக்கொண்டு "தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று தனது தோல்வி ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

ஆயுதப் போராட்டம் 

அதேபோல தமிழர்களுக்கு தனி நாடு பெற்று தருவோம் என்று போராட புறப்பட்ட ஆயுதப் போராட்ட ஆயுதப் போராட்ட இயக்கங்களின் தலைவர்கள் யாரும் தமது தோல்வி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க முடியாமலே மரணமடைந்தனர். ஆயினும் தொடர்ச்சியாக ஆயுதப் போராட்டம் சண்டைக்கலங்களில் வெற்றிகளை குவித்தும் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது மாத்திரமல்ல "போராளிகள் சுய முடிவு எடுங்கள்" என்ற கட்டளையை தமிழ்த் தலைமை இட்டதன் மூலம் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் இறுதித் தலைவரும் தனது தோல்வியின் ஒப்புதல் வாக்குமூலமாகவே இதனை எடுத்துக்கொள்ள வேண்டும்..

தமிழர்களின் எதிர்காலம் என்ன..! அரசியல்வாதிகளே - அறிஞர்களே உங்கள் தீர்வை முன்வையுங்கள் | Article About Tamil People Future

அந்த அளவிற்கு சிங்கள தேசத்தின் ராஜதந்திர செயலாண்மை வெற்றி அமைந்திருக்கிறது. இதிலிருந்து இரண்டு நூற்றாண்டு அரசியலில் தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒரே வகையிலேயே சிங்கள ராஜதந்திரத்தால் வெற்றி கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இங்கே அரசியல் தலைவர்களுக்கிடையிலான போட்டிகளும், பொறாமைகளும், கழுத்தறுப்புகளும் எவ்வாறு இடம் பெற்றதோ அவ்வாறே ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கு இடையிலே ஏற்பட்ட முரண்பாடுகளும் அவர்களுக்கிடையிலான சண்டைகளும் எமது அறியாமையினாலும், எமது ராஜதந்திர பாரம்பரிய தொடர்ச்சி இன்மையினாலும், எதிரிகளின் சூழ்ச்சி வலைகளினாலும், சர்வதேச ஊடுருவல்களினாலும், அவர்களின் தந்துரோபாயங்களினாலுமேதான் உள்ளக முரண்களும், மோதல்களும் உருவாகின என்பதனை தத்துவார்த்த ரீதியில் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இலங்கை தீவில் தமிழ் மக்களை ஒடுக்குவதிலும், அழிப்பதிலும், வெற்றி கொள்வதிலும் சிங்கள தேசத்தின் அரசியல்வாதிகள் ராஜதந்திர ரீதியாகவும், புத்திசாதுரியமாகவும் நடந்திருக்கிறார்கள். அவர்களது இராஜதந்திர வியூகத்தை தமிழர்களால் உடைக்க முடியவில்லை என்பதுவே முற்றிலும் முடிவார்ந்த உண்மையாகும்.

தோல்விகளின் சாம்பல் மேட்டில் இருந்து கொண்டு நாம் வெற்றிக்கான பாதையை இன்று தேட வேண்டி உள்ளது. தோல்விக்கான காரண காரியங்களை கண்டறியாமல் வெற்றிக்கான பாதையை நாம் கண்டறிய முடியாது. நாம் வரும் வீர தீர கதைகளைப் பேசி எதனையும் சாதிக்க முடியாது. 2009க்குப் பின்னான நிலைமையில் ஈழத் தமிழர்களின் அரசியல் பாதுகாப்பு, நிலம், பொருளாதாரம், சமூக இருப்பு, சர்வதேச அரசியல் எடை ஆகியவற்றை எவ்வாறு கட்டியெழுப்புவது? என்ற கோணத்தில் அணுகுவது மிக அவசியமானது அதுவே இன்றைய உடனடித் தேவையும் கூட.

இன்று 2026ன் நிலைமை 2009ல் இருந்ததைவிட முற்றிலும் வேறுபட்டதாக மாற்றமடைந்துள்ளது. இலங்கை பொருளாதாரம் இன்னும் IMF திட்டத்தின் கீழ் உள்ளது. அதேநேரம் சீனாவும் இலங்கையுடன் தனது “strategic cooperative partnership”-ஐ பல மடங்கு உச்ச நிலையில் வலுப்படுத்தி விட்டது. அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு கடல் நகரம், கொழம்பு துறைமுகம் என கடல்சார் அரசியலை சீனா இந்து சமுத்திர ஆளுகை என்ற மூலோபாயத்தின் கீழ் பலப்படுத்தியுள்ளது.

இது புவிசார் அரசியலில் இந்தியாவுக்கான அச்சுறுத்தலாகவும், போட்டியுமாகிவிட்டது. இந்நிலையில்தான் இந்தியாவை சமாளிக்கவும், அதற்குப் போக்கு காட்டுவதற்கும் இலங்கை அரசு இந்தியாவுடனான போக்குவரத்து இணைப்பு, எரிசக்தி, துறைமுகம், வர்த்தகம் போன்ற உறவுகள் வலுப்படுத்த முனைப்பு காட்டுவதாக தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது.

வடக்கு - கிழக்கில் வாழும் தமிழர்களின் எதிர்காலம்

இது சிங்கள அரசியலின் இராஜதந்திர முதிர்ச்சியின் வெளிப்பாடு. இத்தகைய போக்குகளால் இலங்கைத் தீவின் வடக்கு - கிழக்கில் வாழும் தமிழர்களின் எதிர்காலம் என்பது வெறுமனே கொழும்பு - தமிழர் உறவு என்ற இருதரப்பு பிரச்சினையாக இல்லாமல், இந்து சமுத்திர அரசியல், புவிசார் அரசியல், இந்தியாவின் பாதுகாப்பு நலன், சீனாவின் கடல்சார் மற்றும் பொருளாதார நலன், வல்லரசு களின் இந்து சமுத்திர ஆளுகைப் போட்டிகள், இலங்கையின் அரசியல் பொருளாதாரத் தேவைகள் ஆகியவை சந்திக்கும் ஒரு இடமாக மாறியுள்ளது. அப்படியானால் அடுத்த கட்ட ஈழத்தமிழர் அரசியல் என்னவாக இருக்க வேண்டும்? என்பதை இன்றைய தமிழ் தலைமைகள் ஆய்வு செய்யவும் அதற்கான செயல் திட்டங்களை வரையறை செய்யவும் வேண்டிய அவசிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு இன்றைய நிலையில் எத்தகைய செயற்திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதை பார்ப்போம். “ஈழத் தமிழர் இறைமை” என்ற இலக்கை புதிய அரசியல் மொழியில் மறுவரையறை செய்ய வேண்டியுள்ளது. 2009கு முன் இறைமை பற்றிய விவாதம் பெரும்பாலும் ஆயுதம். நிலப்பரப்பு, தனியரசு என்ற சமன்பாட்டில் இருந்தது. இன்று அதே சமன்பாட்டை மீண்டும் உருவாக்குவது நடைமுறையில் சாத்தியம்தான். அதாவது அரசாக சிந்தித்து தேசமாக செயற்பட முடியும். ஆனால் அதற்கு சர்வதேச ஒழுங்கு முறமையில் தமிழர்களுக்கு என்ன அரசியல் வெளி உள்ளது என்பதையும் இதனை எம்மால் உருவாக்கி செயற்படுத்த முடியும் என்ற நம்பிக்கைக்கு முதலில் தமிழ்மக்கள் வரவேண்டும்.

தமிழர்களின் எதிர்காலம் என்ன..! அரசியல்வாதிகளே - அறிஞர்களே உங்கள் தீர்வை முன்வையுங்கள் | Article About Tamil People Future

எனவே “ஈழத்தமிழர் இறையாண்மை”என்பது தமது நிலத்தில் வாழும் உரிமை, நிலத்தின் மீது சட்டபூர்வமான உரிமை, தமது அரசியல் நிறுவனங்களை நடத்தும் அதிகாரம், மொழி மற்றும் பண்பாட்டு பாதுகாப்பு, தமது வளங்கள் மீது தீர்மானிக்கும் பங்குஈ பாதுகாப்பு உத்தரவாதம், வெளிநாட்டு முதலீடு மற்றும் உலகத் தொடர்புகளைப் பயன்படுத்தும் திறன், சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் ஆற்றல் என்பவற்றை உள்ளடக்கிய நிர்ணய உரிமையை என்ற நிலையிலிருந்து சிந்தித்து நடைமுறையில் இறையாண்மையையாக (sovereignty) செயல்பட வேண்டும்.

வட-கிழக்கின் நிலம் மற்றும் மக்கள் தொகை தொடர்பான பிரச்சினை முதன்மை அரசியல் பிரச்சினையாக முன்னெடுக்கப்பட வேண்டும். ஐ.நா. மனித உரிமை அமைப்புகள் சமீபத்திய மதிப்பீடுகளிலும் வடக்கு–கிழக்கில் இராணுவப் பிரசன்னம், நிலப் பிரச்சினைகள், காணாமல் போனோர் மற்றும் போர் காலப் பொறுப்புக்கூறல் ஆகியவை இன்னும் தீர்க்கப்பட வேண்டியவை என்று சுட்டிக்காட்டியுள்ளது. அதுவும் மகக்கு சாதகம்தான். அதேநேரத்தில் தமிழரகளிடம் இவற்றுக்கான எத்தகைய புள்ளிவிவர மதிப்பீடுகளும் செய்யப்படவில்லை. அதுவே எமது பெருங்குறைபாடாகும். நாம் தோற்கடிக்கப்பட்டதிலும்விட தோற்கடிக்கப்பட்ட பின்பும் எழுந்திருக்க முயற்சிக்காமலிருப்பதே பெருந்தோல்வியாகும். ஆகவே தமிழர் அரசியலின் மிகத் தெளிவான குறுகியகால இலக்குகளில் யாருடைய நிலம்? யாருடைய நிர்வாகம்? யாருடைய வளம்? என்ற மூன்று கேள்விகளுக்கு நிலம், தொல்பொருள், வனத்துறை, இராணுவப் பயன்பாடு, குடியேற்றம், மீன்பிடி, விவசாயம் ஆகிய அனைத்தையும் மாவட்டம் மற்றும் பிரதேச ரீயாக தரவாக்க செய்யப்படவேண்டும். அவை சட்டபூர்வமான புள்ளிவிபரக் கோவையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

தேர்தல் வாக்குறுதி 

இதற்கு ஒரு Tamil Land & Demography Observatory போன்ற சுயாதீனமான ஆய்வு நிறுவனம் உருவாக்குவது அவசியம். 13வது திருத்தத்தை மட்டும் இறுதி இலக்காகவோ, அல்லது அதனை முற்றிலும் நிராகரிப்பதையும் விடுத்து அதனை கடந்து 13 என்பது இந்தியாவின் அதிகாரபூர்வ நிலைப்பாடே. இலங்கையின் ஒருமைப்பாட்டுக்குள் அரசியல் தீர்வை ஆதரிப்பதாக உள்ளது. அதேநேரம் இன்றைய எம்.பி.பி அரசாங்கம் 13ம் திருத்தச் சட்டத்தை நீக்குவதாகவும், மாகாணசபை ஆட்சி முறையை ஒழிப்பதாகவும் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. எனவே எதிரியை சிக்கலுக்குள்ளாக்கி நிர்பந்தத்துக்கு உட்படுத்தினால் மட்டுமே எதிரிடமிருந்து எதனையாவது பெறமுடியும். எனவே தமிழர்தரப்பு “13ஐ நடைமுறைப்படுத்துங்கள்” என்பதனுாடாக எதிரியை சிக்கலுக்குள்ளாக்க முடியும்.

“எதிரி எதை எதிர்க்கிறானோ அதை நீ ஆதரி, எதிரி எதை ஆதரிக்கிறானோ அதை நீ எதிர்“ அதுவே எதிரியை நிர்பந்தத்துக்கு உள்ளாக்குவதாக அமையும். இந்தியாவை ஏதோ ஈழத் தமிழர்களின் பாதுகாவலன் என்றோ அவர்களுக்கு ஈழத் தமிழர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டிய தார்மீகக் கடமை உண்டு என்று பார்ப்பதைவிட இருதரப்பு நலன்களும் சந்திக்கும் பிராந்திய சக்தி என்ற நிலை எடுப்பதும், அந்த மனப்பாங்கோடு அணுகுவதும்தான் தமிழர்களின் அரசியல் நிலைப்பாடாக இருப்பது அவசியம். எனவே இந்தியாவிடம்“எங்களுக்கு உதவுங்கள்” என்று மட்டும் பேசாமல்,“வடக்கு–கிழக்கின் பொருளாதார மற்றும் கடல்சார் வளர்ச்சி இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கும் எவ்வாறு பயன்படும்?” என்று கோணத்தில் பேசுவதும் அணுகுவதும் தமிழ் மக்களுடைய அரசியலாக அமைய வேண்டும்.

அதுதான் நமது மூலோபாய அரசியலாக (strategic politics) அமையும். அதேநேரம் சீனாவைப் பற்றிய அணுகுமுறை “சீனா எதிரி” அல்லது “சீனா நண்பன்” என்ற இரு முனைகளுக்குள்ளும் சிக்கப்படாமல் சீனாவை தவிர்த்து அல்லது கடந்து நொதுமலாளர் நிலையில் வைத்திருப்பது தமிழர் அரசியலுக்கு உகந்தது. பொருளாதார வலிமை இல்லாமல் அரசியல் வலிமை நீடிக்காது என்பது 2009க்கு பின்னான மிகப்பெரிய பாடங்களில் ஒன்று. வட-கிழக்கின் பொருளாதாரம் மீன்பிடி, உணவு பதப்படுத்தல், விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழிநுட்பம், கல்வி, மருத்துவ சேவை, சுற்றுலா, புலம்பெரிகளின் முதலீடு, சிறு மற்றும் நடுத்தர தொழில் ஆகிய துறைகளில் ஒரு Tamil Economic Development Strategy உருவாக்க வேண்டும். இதன் நோக்கம் “தமிழர்களுக்கு தனி பலமான பொருளாதாரம்” என்பதாக அமைய வேண்டும்.

வட–கிழக்கை இலங்கைப் பொருளாதாரத்துடனும், இந்துசமுத்திர வணிகப் பொருளாதாரத்துடனும் இணைக்கும்போது அதன் உரிமையாளர்களாகவும், பயனாளிகளாகவும் தமிழர்கள் இருக்கவேண்டும். புலம்பெயர் தமிழர்களின் பணத்தைவிட அவர்களின் அறிவு, நிறுவனங்கள், வலையமைப்புத்தான் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றுபுலம்பெயரிகள் அரசியல் என்பது பெரும்பாலும் நிதி திரட்டலாகக் குறுக்கப்பட்டுவிட்டது. அதனை அரசியல் ஆய்வு, சட்டம், சர்வதேச உறவுகள், பொருளாதாரம், தொழிநுட்பம், முதலீடு, கல்வி, ஊடகம், பரப்புரை,மனிதவுரிமை ஆவணப்படுத்தல் என துறைசார் வல்லுநர்களை ஒருங்கிணைக்க முடியும். அதாவது “பணம் அனுப்பும் புலம்பெயரி அறிவையும் நிறுவனங்களையும் உருவாக்கும் புலம்பெயரி என்ற மாற்றம் நிகழ்த்தப்பட வேண்டும்.

தமிழர்களின் எதிர்காலம் என்ன..! அரசியல்வாதிகளே - அறிஞர்களே உங்கள் தீர்வை முன்வையுங்கள் | Article About Tamil People Future

கடந்த காலத்தை மறக்காமலும், அதேநேரத்தில் கடந்த காலத்தால் நிரந்தரமாக ஆளப்படாமல் இருக்க வேண்டும். நினைவுகள் என்பது அரசியல் உந்துசக்தியாக இருக்கலாம், ஆனால் நினைவுகள் மட்டும் அரசியல் செயல்த்திட்டமாக அமையமுடியாது. முள்ளிவாய்க்கால், காணாமல் போனோர், நில இழப்பு, பொதுமக்கள் உயிரிழப்பு, முன்னாள் போராளிகளின் அனுபவங்கள் ஆகியவை வரலாற்றுப் பதிவுகளாகவும் நீதிக்கான கோரிக்கைகளாகவும் பாதுகாக்கப்பட வேண்டும். ஐ.நா. அமைப்புகளில் எமக்கான உண்மை, நீதி, காணாமல் போனோர், பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினைகளில் இன்னும் ஒரு அங்குலம்தானும் தீர்க்கப்படவில்லை.

தமிழர் அரசியலில் கட்சி வேறுபாடு 

ஆயினும் அடுத்த தலைமுறையின் அரசியல் முற்றிலும் 2009ஐ சுற்றியே இயங்கக்கூடாது. இதற்கு மேலாக தாயகத்தில் தமிழர் ஒற்றுமை மிக அவசியம். தமிழர் அரசியலில் கட்சி வேறுபாடு இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம்

1.நில உரிமை

2.அரசியல் அதிகாரப் பகிர்வு

3.மொழி உரிமை

4.காணாமல் போனோர் மற்றும் நீதி,

5.இராணுவமயமாக்கல் குறைப்பு,

6.மீன்பிடி உரிமை,

7.பொருளாதார வளர்ச்சி,

8.கல்வி மற்றும் தொழில்நுட்பம்,

9.புலம்பெயர் முதலீடு,

10.இந்தியப் பெருங்கடல் புவிசார் அரசியலில் தமிழர்களின் பொருளாதார-அரசியல் பங்கு என்பவற்றில் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகளுக்குள் போட்டி இருக்கலாம் ஆனால் இந்த அடிப்படைத் தேசிய நலன்களில் குறைந்தபட்ச பொதுத்திட்டமும், உடன்பாடும் எட்டப்பட வேண்டும். ஈழத் தமிழர் அரசியலின் அடுத்த கட்டம் எதிரியை எப்படி தோற்கடிப்பது? என்ற கேள்வியிலிருந்து எங்களைத் தோற்கடிக்க முடியாத வகையில் எவ்வாறு ஒரு மக்கள் - அரசியல் - பொருளாதார - சர்வதேச நிறுவன சக்தியை உருவாக்குவது? என்பதாக இருக்க வேண்டும்.

தமிழர்களின் எதிர்காலம் என்ன..! அரசியல்வாதிகளே - அறிஞர்களே உங்கள் தீர்வை முன்வையுங்கள் | Article About Tamil People Future

அது நிறுவனமயப்பட்ட போராட்டம், அறிவுப் போராட்டம், ஜனநாயகப் போராட்டம், பொருளாதாரப் போராட்டம், சட்டப் போராட்டம் மற்றும் சர்வதேச அரசியல் ஆகியவற்றின் நீண்டகால ஒருங்கிணைப்பாக மாறவேண்டும். அந்த வகையில், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான தமிழர் அரசியலின் மிகப் பெரிய சவால் என்ன இழந்தோம்? என்பதை நிரூபிப்பது மட்டும் அல்ல, இனி எதை உருவாக்கப் போகிறோம்? என்பதற்கு நிறுவன ரீதியான கருத்தியல் உருவாக்குவதுதான். " இரண்டு தடவைகள் தோல்வி அடையும் ஒரு வியூகத்தை சிங்கக் கூட்டம் மூன்றாவது தடவை மாற்றி அமைத்துக் கொள்ளும்." என்பது பிராணிகள் நடத்தையியல் விஞ்ஞானம் (Animal behavioral science) தரும் பாடம்.

ஈழத் தமிழர் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாய் தோல்வி அடையும் தமது வியூகங்களை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். ஈழத்தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்க புதிய சிந்தனையும், புதிய பார்வையும், புதிய அணுகுமுறையும் வேண்டும். எந்தப் பாக்கு நீரிணை இலங்கையை ஒரு தீவாக்கி, நாடாக்கி, தனி அரசாக்கியதோ! எந்தப் பார்க்கு நீரிணை இனப்பிரச்சனையின் ஊற்றாய் விளங்குகிறதோ!

அந்தப் பாக்கு நீர்ணைதான் ஈழத் தமிழர்களின் தீர்வுக்கான ஊற்றாயும் திகழ வேண்டும். பாக்கு நீரிணைச் சிந்தனையின்றி ஈழத்தமிழருக்கு விடிவில்லை. அதனை கருத்தில் கொண்டு தமிழ்த் தலைவர்களும் அறிஞர்களும் ஈழத்தமிழர்களின் எதிர்காலத்திற்கான தீர்வை முன்வையுங்கள் என வரலாறு கட்டளையிடுகிறது. 

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.thibaharan அவரால் எழுதப்பட்டு, 12 October, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US