இலக்கு வைக்கப்படும் ஜனாதிபதி அநுர..!பரவும் மிரட்டல் காணொளிகள் -அரசாங்கம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இலக்குவைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அச்சுறுத்தல் காணொளிகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படைவீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் கடுமையான முடிவுகளை எடுப்போம் என்ற தொனியில் வெளியிடப்பட்டுள்ள காணொளிகள், சிங்கள மொழி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
30 ஆண்டுகளாக நாட்டுக்காகப் போராடிய படைவீரர்களை எவ்வாறு தண்டிக்க முடியும் என்ற கேள்வியும் குறித்த காணொளிகளில் எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதியையோ அச்சுறுத்தி தீர்மானங்களை மாற்றவைக்க முடியாது என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது.
மேலும், அரசாங்கத்திற்கு எதிராகச் சதி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பௌத்த தேரர்களின் போராட்டங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான அச்சுறுத்தல் காணொளிகளின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை எடுத்துவருகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..