குவைத்தில் இலங்கையர்களுக்கு இரண்டாம் இடம்! வெளியான புதிய தகவல்
குவைத்தில் உள்ள வீட்டுப் பணிப்பெண்கள் எண்ணிக்கையில் இலங்கைத் தொழிலாளர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
குவைத்தின் சிவில் தகவல்களுக்கான பொது அதிகாரசபை (PACI) வெளியிட்ட தரவுகளில் இருந்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளியான புதிய தகவல்
குவைத்தில் உள்ள மொத்தம் 883,308 வீட்டுப் பணியாளர்களில் 86.1% பேர் (760,744 பேர்) இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நான்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.

இதில் 344,532 தொழிலாளர்களுடன் (39%) இந்தியா முதலிடத்தில் உள்ளது. 157,901 தொழிலாளர்களுடன் (17.9%) இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது.
பிலிப்பைன்ஸ் 151,369 தொழிலாளர்களுடன் (17.1%) மூன்றாம் இடத்திலும், பங்களாதேஷ் 106,942 தொழிலாளர்களுடன் (12.1%) நான்காம் இடத்திலும் உள்ளன.
எஞ்சிய 13.9% (சுமார் 122,564 தொழிலாளர்கள்) பிற நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.