இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டு வந்த இருவர் அபுதாபியிலிருந்து நாடு கடத்தல்
இலங்கை பொலிஸாரால் தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்கள், அபுதாபியில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நேற்று (03) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்துள்ளனர்.
கையடக்க தொலைபேசிகளில் சிக்கிய காணொளி
இரு சந்தேகநபர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்புப் பிரிவினரின் காவலில் இருந்தபோது, ஈரான் நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகள் தொடர்பான காணொளிகளை தமது கையடக்கத் தொலைபேசிகளில் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு கடத்தப்பட்ட இரு சந்தேகநபர்களும் 36 மற்றும் 37 வயதுடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடம் மேலதிக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதையடுத்து, இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.