புலம்பெயர் தமிழர்களின் உதவியை நாடும் இலங்கை அரசாங்கம்
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவது தொடர்பில் இந்தியாவின் கருத்து குறித்து இலங்கை அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க >>>சீன கப்பலால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து
2 புலம்பெயர் தமிழர்களையும் அவர்களது அமைப்புக்களையும் தடைப்பட்டியலில் வைத்துக்கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்களின் உதவிகளை பெற்று கொள்ள முடியாது. எனவே அவர்களின் உதவிகளை பெற்று கொள்வதற்காக முதற்கட்டமாக சில அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கியுள்ளோம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>புலம்பெயர் தமிழர்களின் உதவியை எதிர்பார்க்கிறோம்!
3 ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாக உள்ள நிலையில், ஆணைக்குழுவின் இரண்டு உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
மேலும் படிக்க >>>இலங்கை வரும் ஐ.நா அதிகாரிகள்
3 நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானவர்களுக்கு 117 மில்லியன் ரூபா நட்ட ஈட்டை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர்மட்டம் பிரதமருக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>>மில்லியன் கணக்கில் நஷ்டஈடு கோரும் மகிந்தவின் விசுவாசிகள்
4 இன்று, செஞ்சோலை நினைவு பிரபலமான ஒன்று. நாளை வேறொன்று வரும். வன்னியில் வாழ்ந்த தமிழர்களால் மறக்கமுடியாததாக இருக்கும் பேரவலங்களுல் செஞ்சோலை வளாகம் மீதான விமானத் தாக்குதலும் முதன்மையானது.
மேலும் படிக்க >>>என்ர மகளுக்கு கல்லறை வேணும்!
5 சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கண்காணிப்புக் கப்பலான யுவாங் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடலாம் என்ற இலங்கை அரசாங்கத்தின் அனுமதியை தொடர்ந்து துறைமுகத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க >>>முறுகலுக்கு முடிவு!
6 இலங்கை அரசாங்கம் தனது நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவரைப் பாதுகாக்க ஒரு நட்பு வெளிநாட்டின் உதவியை நாடுவது நல்லதல்ல என்று ஊடக வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும் படிக்க >>>இலங்கை இராணுவத்தையே நம்பாத கோட்டாபய!
7 தமிழகம் - ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் 1986ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்த பெண்ணுக்கு 1955ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின்படி, அவர் இந்தியக் குடியுரிமை கொண்டவர் என்று சென்னை மேல் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
மேலும் படிக்க >>>இலங்கை தமிழ் பெற்றோருக்குப் பிறந்த பெண்ணுக்கு இந்திய கடவுச் சீட்டை வழங்க உத்தரவு
8 சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி கப்பல், இலங்கையின் ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கு, அந்த நாட்டுக்கான தூதுவர் பாலித கோஹனவே அதிக பங்காற்றினார் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க >>>சீன கப்பலின் இலங்கை விஜயத்திற்கான பின்புலம் தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்கள்
9 இலங்கையின் அரச கடன் தொகையானது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 104.6 வீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க >>>இலங்கையின் கடன் 104.6 வீதமாக அதிகரிப்பு
10 தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம்(QR) முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க >>>எரிபொருள் விநியோகத்தில் இன்று நள்ளிரவு முதல் கொண்டுவரப்படும் புதிய மாற்றம்