இலங்கை வரும் ஐ.நா அதிகாரிகள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாக உள்ள நிலையில், ஆணைக்குழுவின் இரண்டு உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அதிகாரி
ஜெனிவா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் ரோரி முன்கோவன் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் வில்லியம் மெக்லக்லன் கார் ஆகியோரே இலங்கை வரவுள்ளனர்.
நாளை மறுதினம் வரும் முக்கிய அதிகாரி
ரோரி முன்கோவன் செப்டம்பர் மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். டேவிட் வில்லியம் மெக்லக்லன் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளதுடன் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
இலங்கை வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரி, ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோரை சந்திக்க உள்ளார்.