ஈரானின் ஏவுகணை தாக்குதல்! தாக்குதல்களுக்கு தயாரான UAE!
ஈரானிடமிருந்து வரும் புதிய ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ளவுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.
ஈரானால் ஏவப்படும் ஒரு பெரிய ஏவுகணைத் தாக்குதலைத் தடுக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்
ஈரானில் இருந்து வரும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் தாக்குதலை எமிரேட்ஸ் தற்போது சமாளித்து வருகிறது என்று பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் பிரதேசத்தின் பாதுகாப்பையும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக அனைத்து அச்சுறுத்தல்களையும் சமாளிக்க அதன் முழு தயார்நிலையை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், ஒன்பது பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஆறு குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 148 ட்ரோன்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (UAE) வான் பாதுகாப்புப் படையினரால் வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக அதன் பாதுகாப்பு அமைச்சகம் (MoD) தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri