பரபரப்பை ஏற்படுத்திய பொலிஸ் மா அதிபரின் மரணம் - பொலிஸ் தரப்பில் இருந்து வெளியான அறிக்கை
மாலபே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலஹேன, பராக்கிரம வீதத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று(17) அதிகாலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி) சி.டி. விக்ரமரத்னவின் மரணத்தை இலங்கை பொலிஸ் இன்று ஒரு உத்தியோகப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விக்ரமரத்ன, அங்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதாக பொலிஸாரர் தெரிவித்துள்ளனர்.
35வது பொலிஸ் மா அதிபராக
இச்சம்பவம் தொடர்பாக மாலபே பொலிஸ் நிலையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. பிரேதப் பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்கு மாகாண தெற்குப் பிரிவு குற்றப்பிரிவு, மாலபே பொலிஸாருடன் இணைந்து இதுகுறித்த மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது.
விக்ரமரத்ன, 2020 நவம்பர் 27 முதல் 2023 நவம்பர் 23 வரை இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.





நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் கைதிகள் அல்ல! வெளிவந்திருக்கும் திடுக்கிடும் தகவல்கள்....