செம்மணி புதைகுழி குற்றவாளியை காட்டிக் கொடுக்க முன்வந்த இராணுவ வீரர் - டக்ளஸ் பகிரங்கம்

Jaffna Douglas Devananda Ministry of Defense Sri Lanka chemmani mass graves jaffna
By Kajinthan Jul 17, 2026 12:59 PM GMT
Report

செம்மணி மனிதப் புதைகுழிகள் விவகாரத்தில் குற்றவாளியாக்கப்பட்ட இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச அண்மையில் தெரிவித்த கருத்து, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது சேறு பூசியவர்களுக்கு பதில் வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்று(16.07.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர்..!

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர்..!

செம்மணி மனிதப் புதைக்குழி

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தமிழ் தேசிய கட்சிகள் எனக் கூறுபவர்கள் தமது சுயலாப அரசியலை முன்னெடுப்பதற்காக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது சிறு பூசல்களை மேற்கொண்டார்கள் தற்போதும் மேற்கொண்டு வருகிறார்கள்.

அவர்களுடைய அரசியலைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் மக்களை தவறான பாதையில் இட்டுச் சென்று மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் அபிலாசைகளையும் அபிவிருத்திகளையும் தடுப்பது கவலை அளிக்கிறது.

தற்போது செம்மணி மனிதப் புதைக்குழி தோண்டப்பட்டு வருகின்ற நிலையில் பல நூறு எலும்புக் கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு இருக்கின்றன.

செம்மணி புதைகுழி குற்றவாளியை காட்டிக் கொடுக்க முன்வந்த இராணுவ வீரர் - டக்ளஸ் பகிரங்கம் | Semmani Somaratna Confession Clear Epdp Doubts

செம்மணி புதைகுழி விவகாரத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியையும் இணைத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அது சளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செம்மணி இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது எங்கள் மீது பழி போட்ட சக தமிழ் கட்சிகளுக்கு செம்மணி விவகாரத்தில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச தெரிவித்ததாக ஊடகங்களில் வெளிவந்த கருத்தை எல்லோரும் அறிந்திருப்பீர்கள்.

மண்டதீவு மனிதப் புதைக்குழி

அதாவது தனக்கு பொது மன்னிப்பு வழங்கினால் செம்மணியுடன் தொடர்புடைய பல இராணுவ உயர் அதிகாரிகள் தொடர்பில் உண்மையை கூறுவேன் என்றார் அவருடைய கருத்துக்களில் ஈபிடிபி தொடர்பில் எந்தக் கருத்துக்களையும் கூறவில்லை.

அவருடைய அந்தக் கருத்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது சக தமிழ் கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்திருக்கிறது.

செம்மணி புதைகுழி குற்றவாளியை காட்டிக் கொடுக்க முன்வந்த இராணுவ வீரர் - டக்ளஸ் பகிரங்கம் | Semmani Somaratna Confession Clear Epdp Doubts

அதேபோன்று மண்டதீவிலும் மனிதப் புதைக்குழி இருப்பதாகவும் அதற்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் தொடர்பாக அண்மையில் ஒரு கருத்து வெளிவந்தது.

அது தொடர்பிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவுக்கு கடிதம் எழுதினேன் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் உண்மையை ஆராயுமாறு தெரிவித்திருக்கிறேன் என்றார். 

திசைகாட்டி அரசை வீட்டுக்கு அனுப்பும் காலம் கனிந்துவிட்டது - சஜித் பகிரங்கம்

திசைகாட்டி அரசை வீட்டுக்கு அனுப்பும் காலம் கனிந்துவிட்டது - சஜித் பகிரங்கம்

கொழும்பு அலுவலகங்கள்

அதேபோன்று கொழும்பில் நாங்கள் பயன்படுத்திய அலுவலகங்களிலும் இவ்வாறு புதைகுழிகள் இருப்பதாக சில வங்குரோத்து தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் பயன்படுத்திய அலுவலகங்கள் நாங்கள் கைவிட்டதன் பின்னர் பல மாடிகளை கொண்ட கட்டடங்களாக மாற்றப்பட்ட போது எந்த தடயங்களும் வெளிவரவில்லை.

செம்மணி புதைகுழி குற்றவாளியை காட்டிக் கொடுக்க முன்வந்த இராணுவ வீரர் - டக்ளஸ் பகிரங்கம் | Semmani Somaratna Confession Clear Epdp Doubts

செம்மணியில் ஒரு அடி அகழ்ந்தெடுக்கும் போது என்புத் தொகுதிகள் வருகிறது என்றால் கொழும்பில் நாங்கள் பயன்படுத்திய அலுவலகம் இருந்த இடங்கள் இன்று 30 மாடிகளுக்கு மேல் கட்டப்பட்டிருக்கிறது.

அவ்வாறு மாடிகளை அமைக்கும் போது ஆக குறைந்தது 15 அடி ஆழமாவது தோண்டி இருப்பார்கள் அவ்வாறு எந்த தடயங்களும் வரவில்லை.

ஆகவே செம்மணி விவகாரம் எம் மீது கலங்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கு சிறந்த ஒரு பாடமாக இருக்கின்ற நிலையில் எனது அரசியல் தமிழ் மக்களுக்கான அரசியலாகவே இருக்கும் சுயநல அரசியலாக எக்காலத்திலும் இருக்காது என தெரிவித்துள்ளார். 

பரபரப்பை ஏற்படுத்திய பொலிஸ் மா அதிபரின் மரணம் - பொலிஸ் தரப்பில் இருந்து வெளியான அறிக்கை

பரபரப்பை ஏற்படுத்திய பொலிஸ் மா அதிபரின் மரணம் - பொலிஸ் தரப்பில் இருந்து வெளியான அறிக்கை

அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US