ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர்..!
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ரோசி சேனநாயக்க, கொழும்பு மாநகர சபையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று(17.07.2026) முன்னிலையாகியுள்ளார்.
கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, அவர் மேயராக இருந்த காலத்தில், சதொச எனும் அரசாங்க நிறுவனம் மூலம் குறைந்த வருமானம் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு வவுச்சர்களை வழங்கிய திட்டம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைப்பு
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
"நான் ஏன் அழைக்கப்பட்டேன் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, நாங்கள் சதொச மூலம் ஏழைகளுக்கு உணவு வவுச்சர்களை வழங்கினோம். அந்தத் திட்டம் தொடர்பான அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காகவே நான் அழைக்கப்பட்டேன் என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
YOU MAY LIKE THIS VIDEO