புலம்பெயர் தமிழர்களின் உதவியை எதிர்பார்க்கிறோம்! நீக்கப்படும் தடை தொடர்பில் இலங்கை அரசின் பகிரங்க அறிவிப்பு
புலம்பெயர் தமிழர்களையும் அவர்களது அமைப்புக்களையும் தடைப்பட்டியலில் வைத்துக்கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்களின் உதவிகளை பெற்று கொள்ள முடியாது. எனவே அவர்களின் உதவிகளை பெற்று கொள்வதற்காக முதற்கட்டமாக சில அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கியுள்ளோம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் இது தொடர்பில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"பொருளாதார நெருக்கடியால் வீழ்ச்சியடைந்த எமது நாட்டை மீளக் கட்டியெழுப்ப வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் உதவிகளைப் பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்கவுரையில் அவர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
புலம்பெயர் அமைப்புக்கள்
இந்த நிலையில், புலம்பெயர் அமைப்புக்கள் மீதும் தனிநபர்கள் மீதும் தடையை வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் உதவிகளை எதிர்பார்க்க முடியாது.
இதைக் கருத்திற்கொண்டு முதற்கட்டமாகச் சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதும், தனிநபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க அரசு முடிவெடுத்துள்ளது.

அரசாங்கம் எடுக்கும் தீர்மானம்
தொடர்ந்து தடையில் உள்ள ஏனைய புலம்பெயர் அமைப்புக்கள் குறித்தும், தனிநபர்கள்
தொடர்பிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தும்'' என குறிப்பிட்டுள்ளார்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri