ஈரானின் தாக்குதல் மன்னிக்க முடியாத குற்றமாகும்:ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி
மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் மன்னிக்க முடியாதவை என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்கான உயர்மட்ட பிரதிநிதி (ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவர்) குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் பிராந்தியத்தையும் தாண்டி ஐரோப்பாவையும் மற்றும் அதற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் கணிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தலாம்.மேலும் இவை அச்சுறுத்தலோடு மேலும் தீவிரமான பதற்றத்திற்கு வழிவகுக்கக் கூடாது.
ஈரானின் ஏவுகணை- ட்ரோன் தாக்குதலுக்கு மேலும் பாதுகாப்பு அவசியம்! உக்ரேன் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு
தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தலாம்
பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய (EU) குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுத்து வருகிறோம்.
தாக்குதலுக்குள்ளான அல்லது பாதிக்கப்பட்ட பங்காளி நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் தனது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.
Iran’s attacks of a number of countries in the Middle East are inexcusable.
— Kaja Kallas (@kajakallas) March 1, 2026
The events must not lead to further escalation that could threaten the region, Europe and beyond, with unpredictable consequences.
We are taking all necessary steps to ensure the safety of EU citizens… pic.twitter.com/bzY9e0U4Wr
பதற்றத்தை குறைத்து, ஈரான் அணு ஆயுத செயற்பாட்டை தடுக்கும் வகையில் நிலையான தீர்வை உருவாக்கும் அனைத்து தூதரக முயற்சிகளிலும் நாம் தொடர்ந்து பங்களிப்போம்.