ஈரானின் ஏவுகணை- ட்ரோன் தாக்குதலுக்கு மேலும் பாதுகாப்பு அவசியம்! உக்ரேன் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையில்,ஈரானின் ஏவுகணைகள் மற்றும் “ஷாஹெத்” ட்ரோன்களுக்கு missiles and “shahed” drones எதிராக நூறு சதவீத பாதுகாப்பை வழங்குவது எவ்வளவு கடினம் என்பது அங்கியிருந்து கிடைக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது என உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தனது x தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
வளைகுடா வான்வழி பாதுகாப்பு மேலும் மேம்படுத்தப்பட வேண்டும்
எங்களுக்கு இதுவரை எங்கள் பங்காளர்கள் வழங்கியதை விட மேம்பட்ட வான்வழி பாதுகாப்பு அமைப்புகளையும் விட மேம்பட் தன்மையை கொண்டுள்ள வளைகுடா நாடுகளிலும் கூட, அனைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளும் (ballistic missiles) தடுக்கப்படவில்லை.
அப்பகுதியில் வான்வழி பாதுகாப்பால் தடுக்க முடியாத “ஷாஹெத்” ட்ரோன்களும் இருந்தன. பாதுகாப்பு துறையில் உக்ரைனின் அனுபவம் பல அம்சங்களில் மாற்றமுடியாதது என்பதை இப்போது அனைவரும் அறிந்துள்ளனர்.
இந்த குளிர்காலத்திலும் முழு போரின்போதும் உக்ரைனை ஆதரித்த நாடுகளுடன் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும், அவர்களுக்கு உதவவும் நாங்கள் தயாராக உள்ளோம். ஐரோப்பாவின் கூட்டு பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்த இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
Europe must finally equip itself with real strength, real ability to defend its skies, its land, and its sea against any type of attack. In particular, this means building sufficient air defense production capacity — both against drones and against ballistic missiles.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) March 1, 2026
The… pic.twitter.com/R3EBHTyz7N
ஐரோப்பாவுக்கு போதுமான அளவு வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகள், ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் அனுபவம், மேலும் நவீன தடுப்பு ட்ரோன்களின் போதுமான உற்பத்தி இருக்க வேண்டும்.
ஒன்றிணைந்து, நாம் இதை சாதிக்க முடியும். ஐக்கியமான ஐரோப்பாவின் வலிமையை வலுப்படுத்த உழைக்கும் அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.