இலங்கையில் கோட்டாபயவின் பாதுகாப்பு உறுதி! மகிந்தவிடம் இருந்து சென்ற அழைப்பு
இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1 தனக்கு தெரியாத நபர்களிடமிருந்து திடீரென தனது வங்கிக் கணக்கில் 50 இலட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக, காலிமுகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான ரெட்டா எனப்படும் ரதிது சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>போராட்ட செயற்பாட்டாளருக்கு அதிர்ச்சி - திடீரென கிடைத்த பல மில்லியன் ரூபாய்
2 காலிமுகத்திடல் இளைஞர்களின் போராட்டம் தோற்கவில்லை என்று சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வின் போது நேற்று(12) அவர் கருத்து தெரிவிக்கையிலே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க >>>போராட்டம் தோற்கவில்லை: சரத் பொன்சேகா எச்சரிக்கை
3 இலங்கையில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பான அறிவிப்பொன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க >>>பாடசாலைகளை நடத்துவது குறித்து கல்வி அமைச்சின் தீர்மானம்
4 இலங்கையர்களின் அடையாள அட்டை புதிய மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கமைய, பயோமெட்ரிக் தரவுகளை இணைத்து டிஜிட்டல் அடையாள அட்டை கட்டமைப்பை தயாரிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>இலங்கையில் மாற்றமடையும் அடையாள அட்டை
5 நல்லூர் கோவில் உற்சவம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் யாழ். மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் என்பவருக்கெதிராக யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் சபையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க >>>நல்லூர் கோவில் உற்சவம்: குழப்பத்தை ஏற்படுத்திய சமூக வலைத்தள பதிவு
6 இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் கரையொதுங்கிய நிலையில் கடந்த வியாழக்கிழமை மீட்கப்பட்ட உடல் இலங்கையரது என தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க >>>லண்டன் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை இளைஞன்
7 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை நாட்டிற்கு வருமாறு, முன்னாள் பிரதமரும் கோட்டாபய ராஜபக்சவின் சகோதரருமான மகிந்த ராஜபக்ச விடுத்த அழைப்புக்கு கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து எவ்வித உறுதியான பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் படிக்க >>>மகிந்தவின் அழைப்புக்கு உறுதியான பதில் வழங்காத கோட்டாபய!
8 தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதே தனது பிரதான பணி என்று ரணில் விக்ரமசிங்க சபதம் செய்துள்ளார்.
மேலும் படிக்க >>>சற்று இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டுள்ள நாடு!
9 அனுராதபுரம் ஞான அக்காவின் வீடு மற்றும் விகாரைக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அண்மையில் எரிந்து நாசமான அவரது வீட்டை புனரமைக்கும் பணியிலும் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக இரகசிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் படிக்க >>>ஞான அக்காவின் வீட்டிற்கு தீவிர இராணுவ பாதுகாப்பு
10 கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமிருந்து பெறப்படும் பணம் 50% குறைந்துள்ளது.
மேலும் படிக்க >>>வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பண வரவில் மிகப்பெரிய சரிவு