சற்று இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டுள்ள நாடு! ஜனாதிபதி எடுத்துள்ள சபதம் (Photos)
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதே தனது பிரதான பணி என்று ரணில் விக்ரமசிங்க சபதம் செய்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அறிவிக்கும் சம்பிரதாய நிகழ்வு
கண்டி தலதா மாளிகை மற்றும் நான்கு தேவாலயங்களின் பெரஹெரா நிகழ்வுகள் நிறைவுற்றதை ஜனாதிபதிக்கு அறிவிக்கும் சம்பிரதாய நிகழ்வு நேற்று மாலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
கோட்டாபயவை அடுத்து ரணில் விரைவில் வீடு செல்வார் - பிரபல ஜோதிடர் பரபரப்பு தகவல் |
இதன் போது பெரஹெரா நிகழ்வில் கலந்து கொண்ட யானைகளைக் கௌரவிக்கும் வகையில் சிந்து யானைக்கு பழத்தட்டு அன்பளிப்பு கொடுக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டு தன் கைப்பட பழத்தட்டை வழங்கி வைத்துள்ளார்.
அத்துடன் பெரஹெராவில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு 7 வாழ்நாள் கௌரவ விருதுகள் உள்ளிட்ட 162 விருதுகளையும் வழங்கி வைத்துள்ளார்.
இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டுள்ள இலங்கை
அதன் பின்னர் கருத்து வெளியிடும் போது நாடு தற்போதைக்கு சற்று இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டுள்ளது. எனினும் இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொண்டு, நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வதே தனது முதன்மைப் பணி என்றும் ஜனாதிபதி சபதம் செய்துள்ளார்.