ட்ரம்ப்பின் பொறுப்பற்ற போர்: அமெரிக்க ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெப்ரீஸ் கண்டனம்!
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹக்கீம் ஜெப்ரீஸ், ஈரான் மீதான போருக்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
ட்ரம்ப் ஈரானுடன் மேற்கொண்டுள்ள இந்த மோதலை "தேவையற்ற மற்றும் பொறுப்பற்ற போர்" என்று அவர் விமர்சித்துள்ளார்.
இந்த போர் நடவடிக்கையானது அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேச்சுவார்த்தை
இந்த மோதலின் காரணமாக ஏற்கனவே அமெரிக்கப் பொருளாதாரம் பெரும் அழுத்தத்தைச் சந்தித்து வரும் நிலையில், ட்ரம்பின் இத்தகைய முடிவுகள் சர்வதேச அளவில் அமெரிக்காவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாக ஜெப்ரீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தியாவசியத் தேவைகளுக்கான நிதியை திசைதிருப்பும் இப்போரை நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே எதிர்க்கட்சியினரின் பிரதான கோரிக்கையாக உள்ளது.