லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு எதிரான வழக்கு குறித்து நீதிமன்றின் அறிவிப்பு
லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சந்தைக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகம் செய்யத் தவறியதாக குற்றம் சுமத்தி லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசைபை நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
முன்னதாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு அமைய நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இன்று கொழும்பு மேலதிக நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் நேரடி பேச்சுவார்த்தை நடாத்த தயார் என லாஃப் எரிவாயு நிறுவனத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
சந்தை பிரச்சினைகள் நிலவுவதாகவும் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான தீர்வினை எட்ட முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த நீதவான் வழக்கு விசாரணை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ம் திகதி மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருளான எரிவாயுவை விநியோகம் செய்யத் தவறியதன் மூலம் அரசியல் அமைப்பினை மீறிச் செயற்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.