விமல் வீரவன்ச உள்ளிட்டோருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - விசாரணை ஆரம்பம்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்டோருக்கு எதிராக, கோட்டை நீதவான் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு தொடர்பான குற்றச்சாட்டின் விசாரணை, இன்று(11.11.2026) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி ரொகந்த அபேசூரிய, சாமத் மொரயாஸ் மற்றும் ஆதித்ய பட்டபெந்தி ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் முன் இந்த குற்றச்சாட்டு விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்புக்காவல் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள்
பிரதிவாதி உதய கம்மன்பில சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் மனோகர டி சில்வா தனது வாதங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளார்.

குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர்கள், சுரேஷ் சலேயின் கைது மற்றும் தடுப்புக்காவல் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்று குற்றம்சாட்டி கோட்டை நீதவான் இந்த குற்றச்சாட்டு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.