கோட்டாபயவை அடுத்து ரணில் விரைவில் வீடு செல்வார் - பிரபல ஜோதிடர் பரபரப்பு தகவல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியை இழக்க நேரிடும் அபாயம் உள்ளதாக பிரபல ஜோதிடர் கே.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட நேரம் மிகவும் மோசமாக உள்ளதாக ஜோதிடர் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய பிரச்சினை ஏற்படும் நிலை
இந்நிலையில் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின்னர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து பதவியை விட்டு செல்ல வேண்டிய நிலை வரும்.
இதன் காரணமாக அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் பின்னர் பொதுத் தேர்தலுக்கு நாடு முகங்கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே வெளியிட்ட தகவல்கள் சரியான முறையில் நடந்துள்ளதாக, யூடியூப் சேனல் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜோதிடர் கே.சரத்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபயவின் பதவி விலகல் தொடர்பான கணிப்பு
ஜூலை 12 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது ஜனாதிபதி பதவியை விட்டுவிலக நேரிடும், எதிர்பாராத ஒருவர் ஜனாதிபதியாகுவார், அவரால் இரண்டு மூன்று மாதங்களுக்கே பதவியில் இருக்க முடியும் என குறிப்பிட்டிருந்தார்.

ஜூலை 7ஆம் திகதி காணப்பட்ட அரசியல் நிலவரங்களை கணித்து கூறிய ஜோதிடர் தற்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri