இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் 19 முதல் கட்டாயமாகும் நடைமுறை - வெளியானது அறிவிப்பு
எதிர்வரும் செப்டெம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலையில் நுழையும் அனைத்து வாகனங்களும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் கடுமையாக நடைமுறை
மேலும், அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாகும். இந்த சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். ஆசனப்பட்டி அணியாமல் பயணிக்கும் நபருக்கு 1000 ரூபா அபராதம் விதிக்கப்படலாம்.

அதிவேக நெடுஞ்சாலைப் பேருந்துகளில் ஆசனப்பட்டி அணியாத பயணிகளிடமிருந்து அபராதத்தை வசூலிக்க சட்டபூர்வ வாய்ப்பு உள்ளது. இலங்கை மக்கள் ஆசனப்பட்டி அணிவதன் அவசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உயிரிழப்புகளின் எண்ணிக்கை
அனைவரின் பாதுகாப்பிற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விபத்துகளின் போது ஆசனப்பட்டி இல்லாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆசனப்பட்டி இல்லாத வாகனங்களுக்கு அவற்றை நிறுவுவதற்கு வழங்கப்பட்ட சலுகைக் காலமும் செப்டெம்பர் 19 அன்று முடிவடையும் என தேசிய சாலைப் பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுலா குலரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan