தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வீட்டுக்குச் சென்ற திருமாவளவன்! தமிழக அரசியலில் புதிய சர்ச்சை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை வந்திருந்த தமிழக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்திற்கும் சென்றுள்ளார்.
திருமாவளவனின் இந்த விஜயத்திற்கு தமிழக பா.ஜ.க தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.க தரப்பில் விமர்சனங்கள்
குறிப்பாக, இந்தச் செயல் தமிழக முதலமைச்சர் விஜயின் ஆட்சியைக் கேள்விக்குட்படுத்துவதாகவும் பா.ஜ.க தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
I strongly condemn the shameful and unpardonable act of VCK leader Thol. Thirumavalavan @thirumaofficial visiting the house of Velupillai Prabhakaran — the man whose organisation LTTE assassinated former Prime Minister Rajiv Gandhi in 1991. Prabhakaran was not a freedom fighter. He was the head of a banned terrorist organisation that murdered an elected Prime Minister of India on Indian soil. Any Indian political leader who chooses to visit his house is not showing solidarity with Tamils, he is insulting the memory of Rajiv Gandhi, spitting on the sacrifice of the security forces who fought LTTE and normalising a man who waged war against India. Even more disgraceful is the continued presence of the Congress party @INCIndia in the Tamil Nadu government alongside the VCK. The shameless Congress that lost its own leader to Prabhakaran’s bomb is today sharing power with a party whose leader pays respects at the house of his killer. This is not political necessity. This is political shamelessness. Terrorists do not become respectable because a political party finds them useful for votes. The Congress must either break its alliance with the VCK or forever carry the stain of having shared power with those who glorify the assassin of their leader Rajiv Gandhi. Narayanan Thirupathy, Chief Spokesperson, BJP, Tamil Nadu.
— Narayanan Thirupathy (@narayanantbjp) November 18, 2026
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க மாநிலத் தலைமைப் பேச்சாளர் நாராயணன் திருப்பதி, தனது X தளப் பதிவில், பிரபாகரனின் இல்லத்திற்குச் செல்லும் எந்தவொரு இந்திய அரசியல் தலைவரும் தமிழர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருமாவளவனின் இந்தச் செயல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அத்துடன், தமிழக அரசில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் காங்கிரஸ் தொடர்ந்து கூட்டணி வைத்திருப்பது குறித்தும் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.