சிறையில் சந்திக்காத வகையில் சிறப்பு பாதுகாப்பில் ராஜாங்கனை சத்தாரதன தேரர் - கஸ்ஸப குழுவினர்
விளக்கமறியலில் வைக்கப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 12 ஆம் திகதி பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் தலைமையிலான குழுவினர் ருவன்வெலிசாய அருகே சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த இடத்திற்கு ராஜாங்கனை சத்தாரதன தேரர் தலைமையிலான குழுவினர் வருகை தந்தபோது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி மோதல் வெடித்திருந்தது.
சிறப்பு பாதுகாப்பு
சம்பவம் தொடர்பில், நேற்று கைது செய்யப்பட்ட அவர் எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைதிகள் குழுவுடன் அனுராதபுரம் சிறையில் சிறப்பு வார்ட்டில் பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் தலைமையிலான குழுவினரும் அனுராதபுர சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, அந்த குழுவினரும், ராஜாங்கனை சத்தாரதன தேரரும் ஒருவரையொருவர் சந்திக்காத வகையில், இரண்டு வார்டுகளில் சிறப்பு பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.