இலங்கையில் அதிகாலை ஏற்பட்ட பெரும் அனர்த்தம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழப்பு
கொழும்பு - கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ பரவலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்து இன்று (19) அதிகாலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்தில் தாய் (30), தந்தை (35) மற்றும் 2 வயதும் 6 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.
தீ பரவலுக்கான காரணம்
தீ விபத்து ஏற்பட்ட இரண்டு மாடி கட்டடத்தின் கீழ் தளத்தில் மின்சாதன உபகரண விற்பனை நிலையம் அமைந்துள்ளதுடன், உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள் மேல் தளத்தில் தங்கியிருந்ததாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில், தீயை கட்டுப்படுத்துவதற்காக கோட்டே தீயணைப்புப் பிரிவின் 03 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, தீ பரவலுக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


