ட்ரம்பைக் கொல்ல சதித்திட்டம்.. பாகிஸ்தானியருக்கு கொடூர தண்டனை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தானியரான ஆசிப் மெர்ச்சண்டுக்கு 27 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளியின் வாக்குமூலம்
ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சுலைமானி, 2020 ஜனவரியில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தச் சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் அரசியல்வாதி அல்லது அரசாங்க அதிகாரி ஒருவரைக் கொலை செய்வதற்காக கூலிப்படையினரை அமர்த்த மெர்ச்சண்ட் முயன்றதாக புரூக்ளின் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
எனினும், ஈரானின் தெஹ்ரானில் உள்ள தனது குடும்பத்தினரைப் பாதுகாப்பதற்காகவே இந்தச் சதித்திட்டத்தில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும், யாருக்கும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் தான் பிடிபடுவேன் என எதிர்பார்த்ததாகவும், ஆசிப் மெர்ச்சண்ட் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
பாக்ஸ் ஆபிஸ்: சூர்யாவின் சீன் படம் வெளிவந்த 12 நாளில் உலகம் முழுவதும் செய்துள்ளா வசூல்... Cineulagam