பிரான்ஸில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் தமிழ் பெண் படுகொலை
பிரான்ஸில் தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறிய நிலையில், பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
சம்பவத்தில் 51 வயதான பெண், சந்தேக நபர் தள்ளிவிட்டமையினால் இரும்பு கம்பி ஒன்றில் வீழ்ந்தமையினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் பெண் படுகொலை
கடந்த 9ஆம் திகதி குறித்த பெண் காணாமல் போயிருந்த நிலையில், சனிக்கிழமை வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றின் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தமிழர்கள் செறிந்து வாழும் பாரிஸின் புறநகர் பகுதியான லா-கூர்னவ் பகுதியில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது.
குறித்த பெண்ணை தனது கணவன் கொலை செய்துள்ளதாக, மனைவியால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், சந்தேக நபர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
Bigg Boss 10: நீயும், உன் கூட்டமும் முடிந்தால் என்னை அடிச்சி பாருங்கடா? டிடிஎஃப்-ஐ வைத்து மக்களை நேரடியாக தாக்கிய ஜேசன் Manithan