நாளை அனைத்து பாடசாலைகளிலும் இடம்பெறும் சிறப்பு நடவடிக்கை.. கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பான அடிப்படை விழிப்புணர்வுத் திட்டத் தொடரின் கீழ், பாடசாலை மட்டத்தில் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்குத் தெளிவூட்டும் விசேட வேலைத்திட்டம் நாளை (19) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நடைபெறவுள்ளது.
கல்வி அமைச்சின் அறிவிப்பு
புதிய கல்விச் சீர்திருத்தச் செயன்முறை தொடர்பான அடிப்படைப் புரிதலைப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இதற்கு மேலதிகமாக, இது தொடர்பில் மேலதிக புரிதலைப் பெற்றுக்கொள்வதற்காகப் பயன்படுத்த வேண்டிய சட்ட ஆவணங்கள் மற்றும் விழிப்புணர்வு முறைமைகளும் இதன்போது அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்குத் தேவையான அனைத்துக் கற்றல் ஆவணங்களும் நிகழ்நிலை (Online) முறைமை ஊடாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அதிபர்களுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை மைனா நந்தினி... அவரே வெளியிட்ட கியூட் வீடியோ Cineulagam