பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட போயிங் 777-200 ரக விமானம்..!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தின் அவசரகால வெளியேற்றச் சரிவுப்பாதை (emergency evacuation slide) தற்செயலாக விரிவடைந்ததைத் தொடர்ந்து குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
G-YMMC என்ற பதிவு எண் கொண்ட இந்த விமானம், அடுத்த பயணத்திற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவசரகால வெளியேற்றச் சரிவுப்பாதை

தகவல்களின்படி, விமானத்திற்கு அருகில் 'ஸ்ரீலங்கன் கேட்டரிங்' (Sri Lankan Catering) நிறுவனத்தின் வாகனம் ஒன்று நின்றிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவசரகால வெளியேற்றச் சரிவுப்பாதை விரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகும், அந்த விமானம் தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
எனினும் இந்த அவசரகாலச் சரிவுப்பாதை எவ்வாறு தற்செயலாக விரிவடைந்தது என்பது குறித்தோ அல்லது விமானத்திற்கு ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவு குறித்தோ அதிகாரபூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.