யாழில் சிவப்பு எச்சரிக்கை நிலையில் காற்று மாசுபாடு! முகக்கவசங்களை அணியுமாறு அவசர அறிவுறுத்தல்
இலங்கையின் சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாணத்தில் காற்றின் தரக்குறியீடு 200 என்ற அளவை தாண்டியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை அறிவித்துள்ளது.
ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ள காற்றின் தரம்
இன்று காலை (19) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று காலை 7.05 மணி நிலவரப்படி, பத்தரமுல்லையில் 179, கிளிநொச்சியில் 158, அனுராதபுரத்தில் 158, திருகோணமலையில் 151 மற்றும் சிலாபத்தில் 165 என உயர் மதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதால், பொதுமக்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள சுவாச நோய்கள் மற்றும் ஒவ்வாமை உள்ளவர்கள் KN 95 வகை முகக்கவசங்களை அணியுமாறும், பொதுவெளியில் இருப்பதை தவிர்க்குமாறும் சுகாதாரப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.