அடுத்த மூன்று ஆண்டுகளில் இலங்கைக்கு ஏற்படவுள்ள சிக்கல் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பொருளாதார வளர்ச்சி வேகத்தில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சி ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பொருளாதார ஆய்வாளர்கள் சங்கம் நேற்று(18.11.2026) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் பேராசிரியர் சிறிமேவன் கொலம்பகே, கடந்த சில வருடங்களாகக் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி வேகத்தை தொடர்ச்சியாகப் பேணிச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேணிச் செல்வதில் சிக்கல்
கடந்த இரண்டு மூன்று வருடங்களில் பொருளாதார வளர்ச்சி வேகம் 5வீதம் அளவில் இருந்தது. எனினும், இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து பேணிச் செல்வதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது.

இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3வீதத்திற்கும் 4வீதத்திற்கும் இடைப்பட்டதாகக் காணப்படுவது புள்ளிவிபரங்களின் ஊடாகத் தெளிவாகின்றது. அத்துடன், 2027, 2028, 2029 ஆகிய ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகம் 3 வீதமாகக் குறையும்.
எனவே, இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது கடினம் என்பது எமக்குத் தெளிவாகிறது. அதேபோன்று, 8வீத வளர்ச்சி வேகமானது இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டுமே கடந்து செல்லப்பட்டுள்ளது. அதாவது, 1978 ஆம் ஆண்டும், 2009 ஆம் ஆண்டு யுத்த நிலைமை நிறைவடைந்ததைத் தொடர்ந்து 2010 - 11 ஆம் ஆண்டுகளிலும் மீண்டும் 8வீீத வளர்ச்சி வேகத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
எனினும், இவற்றைத் தொடர்ந்து பேணிச் செல்வது கடினமாக இருந்தது. கடந்த 40 - 50 வருடங்களைப் பார்த்தால், நாம் தொடர்ந்தும் எமது முதலீடுகளை அதிகரித்தோம். ஆனால், முதலீடுகளை அதிகரிக்க அதிகரிக்க நாம் அந்த வளர்ச்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய பொருளாதார வேகம் குறைகிறது. இன்றைய நிலையில் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட எல்லையை அடைந்துள்ளது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வலுவான வெளிநாட்டு முதலீட்டு வரவு: சரிந்துவரும் உலகளாவிய எண்ணெய் விலை - ஆசியாவில் பலமடையும் இந்திய ரூபாய்