அமெரிக்கா, இஸ்ரேலை சாடும் சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனம் கடுமையாக சாடியுள்ளது.
ஈரானில் அணுசக்தி குறித்த ஆய்வுகள் முழுமையாக தடைப்பட்டுள்ளதாகவும் அதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவுமே பொறுப்பு எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதல்களால் இந்த நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்தின், ஆய்வுப் பணிகள் முற்றாகத் தடைபட்டுள்ளதாக அணு ஆயுதக் கட்டுப்பாட்டு நிபுணர் தாரிக் ரவூப் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இத்தாக்குதல்கள் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பினால் தான் கண்காணித்து வந்த அணுசக்திப் பொருட்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது ஆய்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கு, அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுகளே நேரடிக் காரணமாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
குண்டுவீச்சுத் தாக்குதல்கள் ஆரம்பமான போது, ஈரானின் இஸ்பஹான் நகரிலுள்ள அணுசக்தி நிலையத்தை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்த நிலையத்திற்குள் செல்வதற்கான அனுமதி தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், தாக்குதல்கள் தொடங்கிய காலகட்டத்தில் ஈரானிடம் 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட 440.9 கிலோகிராம் யுரேனியம் கையிருப்பில் இருந்ததாக சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனம் மதிப்பிட்டிருந்ததாகவும் ரவூப் குறிப்பிட்டுள்ளார்.
அணுசக்தி நிலையத்திற்கான அணுகலை இழந்ததால், இது குறித்துக் கவலை வெளியிடுவதைத் தவிர சர்வதேச அணுசக்தி முகவர் நிறுவனத்திற்கு வேறு வழியில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை மைனா நந்தினி... அவரே வெளியிட்ட கியூட் வீடியோ Cineulagam