அரசாங்கத்திடம் அனுபவம் கிடையாது - ரோஹித அபேகுணவர்தன
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் அனுபவம் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
தங்களிடம் கலாநிதி, பேராசிரியர் போன்ற பட்டங்கள் எதுவும் கிடையாது என்ற போதிலும், மக்களினால் வழங்கப்பட்ட பட்டங்கள் உண்டு என அவர் தெரிவித்துள்ளார். இந்த மண்ணின் வாசனையை அறிந்தவர்கள் தாமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆரம்ப காலங்களில் தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் வெகுவாக ஆதரவு வழங்கியதனை தாம் ஒப்புக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் கட்டியணைத்து இந்த அரசாங்கத்தை வரவேற்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தற்போது அவ்வாறான ஒரு நிலைமை இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நான்காவது வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது இந்த நிலைமை மேலும் மோசமடையும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்திடம் அனுபவம் இல்லாத போதிலும், தங்களிடம் போதிய அளவு அனுபவம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் மீதும் இந்த மண் மீதும் நேசம் கொண்டு அரசியலில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோகித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்: சூர்யாவின் சீன் படம் வெளிவந்த 12 நாளில் உலகம் முழுவதும் செய்துள்ளா வசூல்... Cineulagam
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை மைனா நந்தினி... அவரே வெளியிட்ட கியூட் வீடியோ Cineulagam