வங்காள விரிகுடாவில் கடும் புயலாக வலுவடைந்துள்ள அக்வான்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அக்வான்' (Akvan) புயல் தற்போது கடும் புயலாக (Severe Cyclonic Storm) வலுவடைந்துள்ளது.
இந்த புயல் மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து, 20 நவம்பர் 2026 அன்று காலை 11.30 மணிக்குள் இந்தியாவின் வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் நேற்று (18 )நவம்பர் 2026 அன்று இரவு 11.30 மணிக்கு, அட்சரேகை 13.9°N மற்றும் தீர்க்கரேகை 85.3°E (திருகோணமலையிலிருந்து சுமார் 740 கி.மீ வடகிழக்கில்) அருகே மையம் கொண்டிருந்தது.
முக்கிய அறிவுறுத்தல்
இந்த புயல் அமைப்பு மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து, 20 நவம்பர் 2026 அன்று காலை 11.30 மணிக்குள் இந்தியாவின் வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, மறு அறிவிப்பு வரும் வரை, அட்சரேகை 10 முதல் 20°N வரையிலும், தீர்க்கரேகை 80 முதல் 95°N வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் கடற்றொழில் மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
குறித்த கடல் பகுதிகளில் உள்ள கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகத்தினர் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகளைக் கவனத்தில் கொள்ளுமாறு கடற்றொழில் சமூகத்தினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடல் பகுதிகளில் கொந்தளிப்பு
நாட்டை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பெரும்பாலும் மழை இருக்காது என்றும், கடல் பகுதிகளில் வடமேற்கு அல்லது வடக்கிலிருந்து காற்று வீசும், மேலும் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 30-40 கி.மீ. ஆக இருக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை முதல் திருகோணமலை வரையிலும், மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில், காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 50-55 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
காங்கேசன்துறை முதல் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வழியாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும். ஏனைய கடல் பகுதிகள் மிதமான கொந்தளிப்புடன் காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது, கடல் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும், அப்போது கடல் பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.