வரலாற்றில் அரச ஊழியர்களுக்கு உயர்ந்த சம்பள அதிகரிப்பை வழங்கிய அநுர அரசாங்கம்
அரச ஊழியர்களுக்கு அண்மைக்கால வரலாற்றில் இந்த அரசாங்கத்தைப் போன்று சம்பள அதிகரிப்பு வழங்கிய அரசாங்கம் இல்லை என்று நான் கருதுகின்றேன் என ஜனபலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் சாமர ஹத்தொடுவ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரச சேவையை மறுசீரமைத்து, அரசாங்கத்தின் அரசியல் நோக்கங்களுக்கும் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் பொறுப்புக்கூறும் வகையில் அதனை மாற்றியமைப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
அரச ஊழியர்களின் செயல்திறன்
ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள சமூகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான காலம் தற்போது வந்துவிட்டது. இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாவது ஆண்டில் நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.
அரச இயந்திரம் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கும் அபிலாஷைகளுக்கும் பொறுப்புக்கூறும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
அரசாங்கம் எவ்வளவு நேர்மையாகச் செயற்பட்டாலும், எவ்வளவு தொலைநோக்குடன் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் கொள்கைகளையும் திட்டங்களையும் முன்வைத்தாலும், அவை அரச இயந்திரத்தின் ஊடாக முறையாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் எதிர்பார்த்த பலன்களைப் பெற முடியாது.

எனவே, அரசியல் உறுதிப்பாடும் அரச ஊழியர்களின் அர்ப்பணிப்பும் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் அரசாங்கத்தின் கொள்கைகளையும் முன்மொழிவுகளையும் நடைமுறை யதார்த்தமாக மாற்ற முடியும்.
இதற்காக அனைத்து துறைகளிலும் அரசாங்கத்தின் அரசியல் தலையிடும் வழிநடத்தலும் மிகவும் அவசியம். போதிய அறிவு அல்லது திறன் இல்லாத அரச ஊழிர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களை உரிய தரத்திற்கு உயர்த்த வேண்டும்.
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கும்போது அவர்களின் செயல்திறன் மற்றும் பணித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பள உயர்வுகளும் ஏனைய கொடுப்பனவுகளும் வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு செய்தால்தான் தனியார் துறையைப் போன்று அரச ஊழியர்களும் தங்களது அதிகபட்ச திறனைப் பயன்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கக்கூடிய சூழல் உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.