அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு.. சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய ஆவணம்
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் சம்பள ஆணைக்குழு, எதிர்வரும் ஆண்டின் முதற்காலப்பகுதியில் அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும் என அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்தார்.
அத்துடன், சம்பள ஆணைக்குழுவின் ஊடாக மாத்திரமே அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காண முடியும் என விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.டி. லால் காந்த குறிப்பிட்டார்.
தொழிற்சங்க நடவடிக்கைகள்
நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றும் போதே அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

மேலும், சம்பள ஆணைக்குழுவைத் தவிர்த்து, போராட்டங்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஊடாக சம்பள விவகாரங்களில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
அரச சேவை தொழிற்சங்கத்தினர் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர், அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள், சேவைப் பிரமாணக் குறிப்புகள் மற்றும் சேவை நிலைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான தமது முன்மொழிவுகள் மற்றும் கோரிக்கைகளை சம்பள ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.