மகிந்தவின் அழைப்புக்கு பதில் வழங்காத கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவை நாட்டிற்கு வருமாறு, முன்னாள் பிரதமரும் கோட்டாபய ராஜபக்சவின் சகோதரருமான மகிந்த ராஜபக்ச விடுத்த அழைப்புக்கு கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து எவ்வித உறுதியான பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
மீண்டும் ராஜபக்சர்கள் மீண்டெழுவார்கள் - நாடாளுமன்றத்தில் முழக்கம் |
மகிந்த விடுத்த அழைப்பு
முதலில் மாலைதீவுக்குச் சென்றிருந்த கோட்டாபய, அதன் பின்னர் சிங்கப்பூருக்குச் சென்று தங்கியிருந்ததுடன் அங்கு அவர் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த காலம் முடிவடைந்த நிலையில் அவர் தற்போது தாய்லாந்துக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, கோட்டாபயவை மீண்டும் நாட்டுக்குத் திரும்புமாறு விடுத்த கோரிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து எவ்வித உறுதியான பதிலும் கிடைக்கவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சற்று இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டுள்ள நாடு! ஜனாதிபதி எடுத்துள்ள சபதம் (Photos) |
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் வந்து மீண்டும் தங்குவதற்கு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளும் இல்லை என்று பாதுகாப்பு தரப்பினர் தற்போது உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.