வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லவிருந்த 20,000 பணியாளர்களுக்கு நேர்ந்த கதி!
மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் போர் சூழலினால் புலம் பெயர் தொழிலுக்காக செல்லவிருந்த இருபதாயிரம் இலங்கையர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் என அனுமதிப்பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் போர் பதற்றமும் நிச்சமற்ற தன்மையில் மத்திய கிழக்கின் தொழில் துறை தொடர்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே சங்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
ஏற்பட்டிருக்கும் தடைகள்
விமான சேவைகள் நிறுத்தப்படல் மற்றும் விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதால் சொல்வதற்கான திகதி மாற்றங்களால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் செய்லாளர் எப்.எம்.அர்பாத் தெரிவித்துள்ளார்.அது தொடர்பில் தொடர்ந்துரையாற்றிய அவர்,
சவூதி- கட்டார்- குவைத்- டுபாய் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுமதிபத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் ஊடாக வீட்டு பணியாளர்கள்- சாரதிகள்- சுப்பர் மார்க்கட் பணியாளர்கள் உட்பட பல தொழில்களுக்காக கடந்த இரு கிழமைகளில் இருபதாயிரம் பேர் செல்லவிருந்தனர்.

அத்தோடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் ஒரு நாளைக்கு மட்டும் ஆயிரம் பேர்களுக்கு மேல் பதிவு செய்கின்றனர்.
அது இன்றைய சூழலில் 200 ஆக குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam